மேலும் செய்திகள்
சேவைகள் குறைபாடு வோடாபோன் முதலிடம்: ஆய்வில் தகவல்
1 hour(s) ago
காங்கிரசுக்கு ஒருபோதும் அழிவே கிடையாது: கார்கே
3 hour(s) ago | 5
கார்வார்:ஜனாதிபதி திரவுபதி முர்மு, 67, சவால் மிகுந்த நீர்மூழ்கிக் கப்பல் பயணத்தை நேற்று மேற்கொண்டார். 'ஐ.என்.எஸ்.வாக்சீர்' என்ற நீர்மூழ்கிக் கப்பல் முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இது, கல்வாரி வகையைச் சேர்ந்தது. கல்வாரி என்றால் மலையாளத்தில் புலி சுறா என்று பெயர். அதே போல் இந்த நீர்மூழ்கிக் கப்பலும் எதிரிகளை வேட்டையாடும் என்பதை குறிப்பதற்காக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த 'ஐ.என்.எஸ்.வாக்சீர்' கப்பலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று பயணித்தார். கர்நாடக மாநிலம் கார்வார் கடற்படைத் தளத்தில் இருந்து மேற்கு கடற்பகுதியில் இந்த நீர்மூழ்கிக் கப்பல் பயணித்தது. ஜனாதிபதியுடன், கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதியும் உடன் சென்றார். பயணத்தின் போது நீர்மூழ்கிக் கப்பலுக்குள் நடக்கும் செயல்பாடுகள் குறித்து ஜனாதிபதிக்கு விவரிக்கப்பட்டது. கடற்படை வீரர்களுடன் அவர் உரையாடினார். நீர்மூழ்கிக் கப்பல் பணியில் உள்ள சிரமங்களை நேரில் அறிந்துகொண்டார்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மட்டுமே இதற்கு முன் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்துள்ளார். அந்த வரிசையில் நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த இரண்டாவது ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். இது குறித்து கடற்படை வெளியிட்ட அறிக்கையில், 'முப்படைகளின் உச்ச தளபதியாக உள்ள ஜனாதிபதியின் இந்த பயணம், கடற்படைக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
1 hour(s) ago
3 hour(s) ago | 5