உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளைஞர்கள் தான் நமது பலம், சொத்து: நட்டா பேச்சு

இளைஞர்கள் தான் நமது பலம், சொத்து: நட்டா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ இளைஞர்கள் தான் நமது நாட்டின் சொத்து, பலம்'' என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார்.டில்லியில் உள்ள பா.ஜ., தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நட்டா பேசியதாவது: ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியோரை பெரிய ஜாதிகளாக பிரதமர் மோடி அடையாளம் காட்டியுள்ளார். நாடு முழுவதும் ராமர் மீது பக்தி பரவி வரும் இந்த நேரத்தில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் சாதுக்கள் மீது தாக்குதல் நடக்கிறது. இளைஞர்கள் தான் நமது நாட்டின் சொத்து, பலம். இந்திய மக்கள் தொகையில் சுமார் 61% பேர் 35 வயதிற்கு உட்பட்டவர்கள். இது இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது என்ற மோடியின் தீர்மானத்தை நிறைவேற்ற பெரிதும் உதவும். இளைஞர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர பா.ஜ., அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கி உள்ளது. ஐ.ஐ.டி.,கள், எய்ம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

g.s,rajan
ஜன 13, 2024 23:01

இந்தியாவில் பல இளைஞர்கள் வேலை எதுவும் இல்லாம ,வருமானம் இல்லாம சும்மாவே இருக்காங்க ,சும்மா இருக்கறது எவ்வளவு பெரிய கஷ்டம் தெரியுமா...???


g.s,rajan
ஜன 13, 2024 22:38

நமது நாட்டின் பலமும் இளைஞர்கள்தான் பலவீனமும் இளைஞர்கள்தான்....


g.s,rajan
ஜன 13, 2024 21:52

நமது நாட்டின் பலர் இளைஞர்கள்தான் ஆனால் பலருக்கு சரியான சம்பளம் இல்லாமல் சரியான வேலை இல்லாமத் திண்டாடுறாங்க,என்ன செய்வது ...???


முருகன்
ஜன 13, 2024 20:06

தேர்தல் நேரத்தில் இளைஞர்கள் பலம் தேவை படுகிறது இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு பத்து வருட ஆட்சியில் செய்த சாதனைகள் என்ன என்று பட்டியல் இட முடியுமா


Seshan Thirumaliruncholai
ஜன 13, 2024 17:25

மோகன்தாஸ் கரமச்சந்த் (காந்தி ) ஜவஹர்(நேரு) எந்த அளவிற்கு ஹிந்துக்களுக்கு ஆதரவு இல்லை என்பதனை நேற்றைய இளைஞர்கள் அறிவார்கள். இன்றய இளைஞர்கள் நரேந்தரன் (மோடி) தவிர உயர்ந்த தலைவர்களை காணவில்லை. மோதல் என்றால் ஒற்றைக்கு ஒற்றைத்தான். நரேந்திரன் ஒரு ஒற்றை மற்ற ஒற்றை இல்லாமையால் தேர்வு தெரிந்துவிட்டது. முதிந்தவர் இன்றயவர்கள் ஆதரவு யாருக்கு என்பது நிசர்சனம்


kaja
ஜன 13, 2024 17:12

அந்த 2 கோடி வேலை வாய்ப்பு பத்தி.....


hari
ஜன 13, 2024 19:01

உன்னை தவிர எல்லாரும் வேலை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை