வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அதுக்குள்ள ஒருவர் சோஷியல் மீடியால இவர்களை மோடி பாராட்ட மாட்டார்ன்னு பதிவிட்டார்...
வாழ்த்துக்கள்
புதுடில்லி: பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டினார்.இந்தியா, இலங்கையில், பார்வையற்றோர் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை முதல் சீசன் நடந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றன. இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில், 7 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது.இந்நிலையில் இன்று பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டினார். அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். கிரிக்கெட் பேட் பரிசாக வழங்கினார்.வெற்றி பெற்ற இந்திய அணியை, அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்காக பிரதமர் மோடி பாராட்டினார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:பார்வையற்ற பெண்களுக்கான முதல் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். இது உண்மையிலேயே ஒரு வரலாற்று சிறப்புமிக்க விளையாட்டு சாதனை, கடின உழைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு. அணியின் எதிர்கால முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த சாதனை வருங்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அதுக்குள்ள ஒருவர் சோஷியல் மீடியால இவர்களை மோடி பாராட்ட மாட்டார்ன்னு பதிவிட்டார்...
வாழ்த்துக்கள்