உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் பூமிக்கு முதல் பயணம்: 23-ல் உக்ரைன் செல்கிறார் மோடி

போர் பூமிக்கு முதல் பயணம்: 23-ல் உக்ரைன் செல்கிறார் மோடி

புதுடில்லி: பிரதமர் மோடி வரும் 23-ம் தேதி உக்ரைன் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஜூலை மாதம் ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, உக்ரைனுடன் போர் தீர்வு அல்ல; சமரச பேச்சு தான் தீர்வு தரும் என புடினிடம் கூறியிருந்தார் அப்போது உக்ரைன் விவகாரத்தில் அமைதியை கொண்டு வர தனது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் இந்தியா தொடர்ந்து செய்யும் என பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு உறுதி அளித்திருந்தார்.இந்நிலையில் வரும் 23-ம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் செல்ல உள்ளதாகவும், அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பின் இந்திய பிரதமர் உக்ரைன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இதனை மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போரை நிறுத்துவதில் மோடியின் பங்கு முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Barakat Ali
ஆக 20, 2024 00:52

தலையிடக்கூடாது ........


sankaranarayanan
ஆக 19, 2024 22:07

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போரை நிறுத்துவதில் மோடியின் பங்கு முக்கிய பங்கு வகிக்கும். இதை உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாகவே கண்காணித்து வருகின்றன மோடியினால் இந்த பனிப்போருக்கு ஒரு மூடி போடப்படும் மோடியின் சமாதாந்தான் வெற்றியைகிட்டும்


ஆதிராஜ்
ஆக 19, 2024 21:21

பின்னாடி தளவாடம் விக்கலாம். இது போருக்கான நேரம் இல்லைன்னு எல்லார்க்கிட்டேயும் சொல்லியாச்சு.


Ramesh Sargam
ஆக 19, 2024 19:46

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்திய பிரதமர் மோடிஜியின் போர் நிறுத்த அறிவுரையை ஏட்பாரா? அமைதி நிலவவேண்டுமென்றால், கேட்பது நல்லது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை