உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நைஜீரியா, பிரேசில், கயானா செல்கிறார் பிரதமர் மோடி

நைஜீரியா, பிரேசில், கயானா செல்கிறார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி, நவம்பர் 16ல் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்குச் செல்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை முடித்துக் கொண்டு பிரேசில் மற்றும் கயானாவிற்கும் மோடி செல்ல உள்ளார். பிரதமர் பயணம் குறித்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் மோடி அரசு முறை பயணமாக நைஜீரியா செல்கிறார். இந்த இரண்டு நாள் பயணத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நைஜீரிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். 17 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் நைஜீரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். புலம்பெயர்ந்த இந்தியர்களின் கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுவார்.18, 19 தேதிகளில் ரியோ டி ஜெனிரோ நகரில் நடக்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார்.பிறகு, 19 முதல் 21 தேதிகளில் கயானாவுக்கும் செல்கிறார். 1968 க்கு பிறகு கயானாவிற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைக்கிறது. அங்கு நடக்கும் CARICOM - INDIA உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Mario
நவ 13, 2024 09:03

அந்த மணிப்பூர்?


Kurio, Paris
நவ 13, 2024 12:02

அந்த வேங்கை வயல்?


Indian
நவ 13, 2024 08:49

மக்கள் வரி பணத்தில் , உலகம் சுற்றலாம் ..


Sakthi,sivagangai
நவ 13, 2024 10:09

ஆமா மக்கள் பணத்தில் தன் குடும்பத்துடன் வெளிநாடு சென்று அப்படியே தனக்கு வைத்தியம் பாத்துக்கலாம்..


Ganapathy
நவ 13, 2024 06:00

உனக்கு கொடுக்க முடியாது. என்ன பண்ணுவியோ பண்ணிக்க. உன்னோட ஓஞ்சுபோன ஓட்ட திராவிட திருடனுக்கே போடு வழக்கம்போல.


இறைவி
நவ 13, 2024 05:50

தகுந்த காரணம் அர்த்தம் இவைகள் இல்லாவிட்டாலும் தவறாமல் மோடி எதிர்ப்பு கருத்து பதிவிட்ட இந்த வயிற்றெரிச்சல் உபிக்களுக்கு இன்றைய கோட்டா ரூ 200 வரவு வைக்கப் பட்டது.


அப்பாவி
நவ 12, 2024 23:19

எனக்கு கூட நைஜீரியாவிலிருந்து சில உறவுகள் உனக்கு பேங்க்கில் 150 மில்லியன் வரவு வெக்கிறேன்னு இமெயில் அனுப்பிக்கிட்டே இருக்காங்க. ரொம்ப நல்லவங்க. இங்கே தான் 15 லட்சத்துக்கு வழியக் காணோம்.


Jagannathan Narayanan
நவ 13, 2024 06:41

No meaning in your comment. No where It is said 15 lakhs will be deposited in the bank. Earn and eat. Dont go behind freebies.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
நவ 13, 2024 07:22

என்ன அப்பாவி....200ரு கிரிடிட் ஆகியிருக்குமே....!!!


hari
நவ 13, 2024 08:47

உன் வீட்ல இதை சொன்னா அடி விழும் அப்பாவி


Oviya Vijay
நவ 12, 2024 22:35

உலகம் சுற்றும் வா(ஜா)லிபன்...


vadivelu
நவ 13, 2024 07:31

ஆமாம், குடும்பத்துடன் செல்கிறார், முதலீடு ஈர்க்க, இழுக்க, ஊரை சுற்றி பார்ப்பார், புது புது அசைவ உணவுகளை வெட்டுவார். இதற்கெல்லாம் ஒரு மச்சம் வேணும் . சரியா.. மகிழ்ச்சியோடு இப்படியெல்லாம் கனவு காணுங்கள் .


கண்ணன்,மேலூர்
நவ 13, 2024 10:07

140 கோடி மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டின் பிரதமரை இப்படி கேலி செய்வதற்கு வெட்கமாக இல்லை?அப்பத்துக்கு மதம் மாறியதாலேயே தாய் நாட்டின் மீதான வெறுப்பு தானாகவே தோன்றி விடுமா


புதிய வீடியோ