உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் கோவில் கும்பாபிஷேகம் 11 நாள் விரதம் துவக்கினார் பிரதமர்

ராமர் கோவில் கும்பாபிஷேகம் 11 நாள் விரதம் துவக்கினார் பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், வரும் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன் பின்பற்றப்பட வேண்டிய, 11 நாள் விரதம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை பிரதமர் நரேந்திர மோடி துவங்கினார்.இது குறித்து பேசிய அவர், ''வாழ்க்கையில் இப்படி உணர்ந்ததே இல்லை,'' என, மிகவும் உருக்கமாக தெரிவித்தார்.உ.பி.,யின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம், வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்கஉள்ளார்.இதை முன்னிட்டு, 'யாம் நியாம்' என்ற 11 நாட்கள் சிறப்பு சடங்குகளை பிரதமர் மோடி நேற்று துவங்கினார். இந்த நாட்களில், வேதங்கள் வகுத்துள்ள கடுமையான வழிகாட்டுதல்களை அவர் கடைப்பிடிக்க உள்ளார்.ஆன்மிக குருக்கள் அளித்த அறிவுரைகளின்படி, இந்த கடுமையான சிறப்பு சடங்குகளை செய்வது என, பிரதமர் மோடி உறுதியாக முடிவு செய்து உள்ளார்.இந்த நாட்களில், சூரிய உதயத்திற்கு முன் விழித்தல், யோகா மற்றும் தியானம் செய்தல், குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற கட்டுப்பாடுகளை பிரதமர் மோடி பின்பற்ற உள்ளார்.கடவுள் ராமர் அதிக நேரம் செலவிட்டதாகக் கருதப்படும் மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், இந்த சிறப்பு சடங்குகளை பிரதமர் மோடி நேற்று துவங்கினார்.இது குறித்து, அவர் வெளியிட்ட ஆடியோ செய்தியில் கூறியதாவது:நான் இப்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறேன். என் வாழ்க்கையில் முதன்முறையாக, இது போன்ற உணர்வுகளை அனுபவிக்கிறேன்.ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பது, என் அதிர்ஷ்டம். இதற்காக, புனித நுால்கள் மற்றும் துறவியரின் வழிகாட்டுதலின்படி கடுமையான விரதங்களை பின்பற்றி வருகிறேன்.நான் மேற்கொள்ளும் உள்ளார்ந்த பயணத்தை உணர மட்டுமே முடியும்; வெளிப்படுத்த முடியாது. உணர்வுகளின் ஆழம் மற்றும் தீவிரத்தை, வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.இந்த புனிதமான தருணத்தில், அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கருவியாக கடவுள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார்.இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

g.s,rajan
ஜன 13, 2024 23:35

சீதா தேவி ....???


g.s,rajan
ஜன 13, 2024 23:32

இந்தியாவில் நித்தம் பல கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேளைக்குக் கூட உண்ண உணவு இல்லாமல் பசி,பட்டினியோடு விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.....


J.Isaac
ஜன 13, 2024 15:15

ஸ்ரீ ராம் சொல்லுபவர்கள் நஷ்ட கணக்கு எழுதி இரண்டு மூன்று வருடத்திற்கு ஒருமுறை GST எண்ணை மாற்றி அரசை ஏமாற்றுவதில் இருந்து மாறுவார்களா?


J.Isaac
ஜன 13, 2024 15:12

மணிப்பூர் நிலைமை வேதனை அளிக்கிறது.


sankaran
ஜன 13, 2024 19:58

காஷ்மீர் பண்டிட்கள் நிலைமை வேதனை அளிக்க வில்லையா?..


Sampath Kumar
ஜன 13, 2024 11:48

முருகன் கோவில் கட்டலாம் வாருங்கள் வாருங்கள் பார்க்கலாம் வரமான்டர்கள் இல்லையா தெரியும்டா மூதேவிகளை காரணம் ரோம்ப சிம்பிள் ராமரின் ஆர்யா கடவுள் முருகன் தமிழ்க்கடவுள் சோ வைணவம் வென்றது சைவம் தோற்றது


hari
ஜன 13, 2024 13:58

இது ஆன்மிக பூமி....


ஆரூர் ரங்
ஜன 13, 2024 14:05

ராமேஸ்வரத்தில் சிவனை ராமர் பூஜித்த புராணக் கதை அறிவீர்கள்.


RAMAKRISHNAN NATESAN
ஜன 13, 2024 09:56

ஹிந்துமதத்தில் விரதம் கட்டாயமில்லை ..... விரும்புவோர் கடைபிடிக்கலாம் .....


தமிழ்வேள்
ஜன 13, 2024 11:20

பங்கேற்போருக்கு ,விரதம் விதிக்கப்பட்டதே ...


VENKATASUBRAMANIAN
ஜன 13, 2024 09:13

எதிர்கட்சியினர் பொறாமையில் என்ன பேசுவது என்று தெரியாமல் உளற ஆரம்பித்து விட்டனர். எரிச்சல் அதிகமாகிவிட்டது. அதன் வெளிப்பாடு அவர்கள் பேச்சில் தெரிகிறது.


INNER VOICE
ஜன 13, 2024 08:20

மதிப்பிற்குரிய திரு மோடிஜியே கடவுளின் அவதாரமாகவே நான் கருதுகிறேன். நாம் செய்த பூர்வ ஜென்ம புண்ணியமே அவர் நமது பாரத பிரதமராக வந்துள்ளார்.நாம் எல்லோரும் பெருமைப்படவேண்டிய விஷயம் அவருக்கு ராமபிரான் நீண்ட ஆயுளையும் நல்ல தேஹ ஆரோக்கியத்தையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.....ஜெய் ஸ்ரீராம்.......பாரத் மாதா கி ஜெய்


பைரவர் சம்பத் குமார்
ஜன 13, 2024 08:13

பரந்தாமன்,ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம்.


????????????????????
ஜன 13, 2024 07:50

???????????????????????? ???????? ???? ???????????????? ???????? ???????????????????????? ???????????????????? ???????? ???????????? ????????????... ???????????? ???????????? ????????????


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை