உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரின் பட்டப்படிப்பு தொடர்பான வழக்கு : சான்றிதழ் வெளியிட தேவையில்லை என டில்லி ஐகோர்ட் தீர்ப்பு

பிரதமரின் பட்டப்படிப்பு தொடர்பான வழக்கு : சான்றிதழ் வெளியிட தேவையில்லை என டில்லி ஐகோர்ட் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிடத் தேவையில்லை என்று டில்லி ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிட 2016ம் ஆண்டில் தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், தகவல் அறியும் மனு, அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது என்று வாதிட்டு, தகவல் குழுவின் உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டியதே என்று பல்கலைக்கழகம் கூறியிருந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dyw30h0n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டில்லி பல்கலை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 28 அன்று நீதிபதி சச்சின் தத்தா ஒத்திவைத்தார்.வழக்கு 8 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரதமரின் இளங்கலைச் சான்றிதழை வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணைய உத்தரவை டில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.பல்கலை சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தகவல் ஆணைய உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டியதே என்றும் தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது என்றும் வாதிட்டார்.மாணவர்களின் பட்டங்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவை தனிப்பட்ட நபருடையவை. தகவல் பெறும் உரிமையை காட்டிலும், தனி நபருடைய உரிமைகள் மிகவும் முக்கியமானவை என்று பல்கலை சார்பில் வாதிடப்பட்டது. இதன் அடிப்படையில் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிடத் தேவையில்லை என்று டில்லி ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Jahufar
ஆக 26, 2025 16:13

இந்தியாவில் எதுதான் சரி இது மட்டும் சரியாக இருந்து விடப் போகிறது ஒரு நீதிபதி பென்ஷன் வாங்கியவரே டூப்ளிக் சென்று செய்தியை நானும் படித்தவன் தான் அதனால் எது உண்மை எது பொய் என்று இந்தியாவில் கணக்கு கிடையாது வாய்ப்புள்ளவன் திருடுகிறான், திருடுவதற்கு வாய்ப்பில்லாதவன் தப்பித்துக் கொள்கிறான் இறைவனுடைய தண்டனையில் இருந்து


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 26, 2025 07:19

துண்டு சீட்டு இல்லாமே படிக்க முடியாத அளவுக்கு திணறித் தவிக்கும் எங்க கிம்ச்சை மன்னர் பி ஏ பட்டம் பெற்றவர் .....


Ramanujam Veraswamy
ஆக 26, 2025 00:00

PM has d his qualification in his nomination papers at the time of Lok Sabha Elections. Hence, the stand that his qualification is his personal information is not correct. Unfortunately Delhi High Court has not observef this point in its verdict.


ஆரூர் ரங்
ஆக 25, 2025 20:05

நாட்டுக்கு முக்கியம் ஆள்பவர்கள் என்ன டிரஸ் ,என்ன சாப்பாடு, எவ்வளவு நேர உறக்கம். செருப்பு அளவு. ஆனா ஊழல் செய்து சம்பாதிக்கின்றனரா என்பது முக்கியமில்லை.


M Ramachandran
ஆக 25, 2025 19:38

கிழக்கம் செய்யும் அயல்நாட்டு பக்கி பிரியாணி சாப்பிட்டு பொலுது போகாமல் சுத்தும் ஒரு அயல் நாட்டில் எச்சில் இலையை நக்கி சாப்பிடும் ஒரு பொறுக்கியின் வேலை என்பது தெரிகிறது.


Priyan Vadanad
ஆக 25, 2025 19:38

பொது வாழ்வுக்கு வந்தபிறகு அதென்ன தங்க உண்மை. பல திருவிளையாடல்களில் இதுவும் ஒரு திருவிளையாடல் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். திருவிளையாடல் தெய்வ மகனின் உரிமைதானே.


ராஜாராம்,நத்தம்
ஆக 26, 2025 03:43

அப்பத்துக்கு மதம் மாறிய கும்பல் திருவிளையாடல் பற்றி பேசுவதுதான் விந்தை


Mohan
ஆக 25, 2025 18:47

உண்மையும் அதுவா


ஆரூர் ரங்
ஆக 25, 2025 18:32

சோனியா கேம்பிரிட்ஜ் பல்கலையில் வாங்கியதாக தேர்தல் மனுவில் கூறிய பட்டத்தை வெளியிட வேண்டும்.


Tirunelveliகாரன்
ஆக 25, 2025 19:01

எப்படி இப்படியெல்லாம் பேச முடிகிறது. பிரதமர் நாட்டின் உயர் பதிவு வகிப்பவர். அவரும் மற்றவர்களும் ஒன்றா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை