உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மார்ச்.,7-ல் சந்தோஷ்காலி பேரணி:பிரதமர் பங்கேற்பு

மார்ச்.,7-ல் சந்தோஷ்காலி பேரணி:பிரதமர் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மே.வங்க மாநிலத்தில் பிரச்னைக்குரிய சந்தோஷ்காலியில் வரும் 7-ம் தேதி நடைபெறும் பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ்காலி பகுதியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இப்பிரச்னை குறித்து பா.ஜ.,வினர் சந்தோஷ்காலிக்கு செல்ல முயன்றனர். அப்போது போலீசார் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஏற்பட்ட மோதலில் பா.ஜ.,வை சேர்ந்த சுகந்தா மஜூம்தார் என்பவருக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சந்தோஷ்காலி பகுதியில் பா.ஜ., சார்பில் வரும் மார்ச் மாதம் 7-ம்தேதி பேரணி நடத்தப்பட உள்ளது. இப்பேரணியில் பிரதமர் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது. வரும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஒருநாள் முன்னதாக 7-ம் தேதி சந்தோஷ்காலியில் பிரதமர் பங்கேற்கும் பேரணி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

K.Ramachandran
பிப் 19, 2024 12:26

அந்த பகுதி மகளிர் சொல்லும் கதைகள் ரொம்ப மோசமாக இருக்கு. ஒரு பெண் முதல்வராக இருக்கும் மாநிலத்தில் இந்த நிலைமை.


sahayadhas
பிப் 19, 2024 10:10

அடா , மணிப்பூரில் பேரணி போகலாமே.?


RAMAKRISHNAN NATESAN
பிப் 19, 2024 07:18

முமைதா பேகத்தின் பல ஊழல்கள், நிதி மோசடிகள் ஏற்கனவே மத்திய அரசால் மன்னிக்கப்பட்டு விட்டன .........


Sathyasekaren Sathyanarayanana
பிப் 19, 2024 01:25

மேற்கு வங்கத்தில் மம்தாவுக்கு வோட்டை போடாவிட்டால், தோல்வி அடைந்த தொகுதிகளில் வார்ட் வாரியாக சந்தேகப்படும் வீடுகள், சூறையாடப்படும். அதற்க்கு பயந்து மக்கள் மம்தாவிற்கே வோட்டை போடுகிறார்களாம். வங்காள நண்பர் சொன்னது. கடந்த தேர்தலில் நடந்த வன்முறை உதாரணம்.


Ramesh Sargam
பிப் 19, 2024 00:20

மம்தாவின் கொட்டத்தை அடக்க சிங்கம் வருகிறது.


Priyan Vadanad
பிப் 19, 2024 00:06

ஒருசிலரது ஆட்சியில் சந்தோஷமே காலி. என்ன பண்றது? மீடியா மனிதர்கள் மட்டுமே சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களது சதோஷத்துக்கு நாட்டின் பல மனிதர்களுக்கு சந்தோஷமே காலி.


sankaranarayanan
பிப் 18, 2024 23:57

மே.வங்க மாநிலத்தில் பிரச்னைக்குரிய சந்தோஷ்காலியில் வரும் 7-ம் தேதி நடைபெறும் பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும்போது அங்கே ஆளும் பேய்பிடித்த மமதையால் தடை விதிக்கப்படும் மீறினால் யாராக இருந்தாலும் கைதாம் சுபாஷ் சந்திரபோஸ் அவதரித்த இடத்தில் இந்த வேதனைக்குரிய சம்பவம் சந்தோஷ்காலி பகுதியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குற்றச்சாட்டு நாட்டையே உலுக்கியுள்ளது. சந்தோஷமாக இருக்க வேண்டிய பெண்கள் காலித்தனத்தால் விபரீதமாக சம்பவம் நடந்தேறியுள்ளது ஆனால் அந்த மாநிலத்தயை ஆளும் பெண்ணான முதல்வர் யாருக்கோ எங்கேயோ நடந்தேறியது போன்று கண்டும் காணாததுமாக இருக்கிறார் அவர்யார் அவருக்கே தெரியவில்லையாம்


AMSA
பிப் 18, 2024 23:10

அழியட்டும் கொடுங்கோல் ஆட்சி .. நிம்மதி அடையட்டும் மேற்கு வங்க மக்கள்


Siva
பிப் 18, 2024 23:01

சரியான ராஜ தந்திரம்


rajen.tnl
பிப் 18, 2024 22:52

அங்கெ ஒரு பேய் அரசாளுகிறது


Priyan Vadanad
பிப் 19, 2024 00:07

ஒரு பேயை விரட்ட இன்னொரு ...... ஏற்பாடு செய்யலாமா?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ