உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறை கைதிகள் புனித நீராட ஏற்பாடு

சிறை கைதிகள் புனித நீராட ஏற்பாடு

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 14ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது. வரும் 26ம் தேதி முடிவடைகிறது. இதுவரை 55 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி உள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது. இந்நிலையில், மஹா கும்பமேளாவில் பங்கேற்க முடியாத சிறை கைதிகளுக்கு புனித நீரை கொண்டு வர, சிறைத் துறை அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார். உ.பி.,யில் ஏழு மத்திய சிறைகள் உட்பட 75 சிறைகள் உள்ளன. அதில் 90,000க்கும் மேற்பட்டோர் கைதிகளாக உள்ளனர்.அனைத்து சிறைகளில் இருந்தும், திரிவேணி சங்கமம் சென்று நீரை எடுத்து வர போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு எடுத்து வரும் நீரை, வரும் 21ம் தேதி சிறைகளில் உள்ள வழக்கமான தண்ணீர் தொட்டியில் கலந்து, புனித நீராடலுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை