உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறைக்கைதிகளின் ராமாயண நாடகம்; சீதையை தேடிய வானர சேனைகள் எஸ்கேப்

சிறைக்கைதிகளின் ராமாயண நாடகம்; சீதையை தேடிய வானர சேனைகள் எஸ்கேப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவார் சிறையில், ராமாயண நாடக அரங்கேற்றத்தின் போது, வானர சேனை வேடமிட்ட கைதிகள் இருவர், சீதையை தேடிச்செல்வதாக கூறி, தப்பிச்சென்றனர். அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது.உத்தரகண்ட், ஹரித்துவார் மாவட்ட சிறையில், ஆயுத பூஜையையொட்டி, ராமாயணம் நாடகம் நடைபெற்றது. அப்போது, சீதையை ராவணன் தூக்கி சென்ற பிறகு வானர வேடமிட்ட 2 கைதிகள் சீதையை தேடிச்செல்லும் காட்சியில் நடித்து கொண்டிருந்தனர். வசனம் பேசி முடித்துவிட்டு, சீதையை தேடுவதற்காக சென்ற வானர வேடமிட்ட 2 கைதிகள் வெகு நேரமாகியும் திரும்ப வரவில்லை. நாடகத்தை காவலர்கள் அனைவரும் மெய்மறந்து பார்த்த போது, வானர வேடமிட்ட 2 கைதிகள் ஏணி மூலம் தப்பியோட்டம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தப்பிய இரு கைதிகளும் பல்வேறு கொடிய குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். கொடுங்குற்றவாளிகள் இருவர் வானர வேடமிட்டு, தப்பியோடிய நிலையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

முதல் தமிழன்
அக் 12, 2024 19:49

நீதி மன்ற அவமதிப்பு வழக்கு வரும். உஷார்.


venugopal s
அக் 12, 2024 19:47

வேடத்தில் இருக்கும் வரை அவர்களை உத்தராகண்ட் காவல்துறை பிடிக்க மாட்டார்கள்!


subramanian
அக் 12, 2024 19:24

சிறைக்காவலர்களின் அசிரத்தையை காட்டுகிறது. இது திட்டமிட்ட சதியாக இருக்க வாய்ப்பு அதிகம்.


வானரசேனாபதி
அக் 12, 2024 18:38

சித்தே பொறுங்கோ... எல்லோரும் ஸ்ரீலங்காவுக்கு போயிருக்காங்க. சீக்கிரம் நல்ல செய்தியோட வருவாங்க.


ஆரூர் ரங்
அக் 12, 2024 15:41

176000000000 சாப்பிட்ட ஆ.ரா வே கோர்ட் ஆசியுடன் தப்பித்து வெளியே இருக்கும் போது..


T.Senthilsigamani
அக் 12, 2024 15:34

சிறைக்கைதிகளின் ராமாயண நாடகம் சீதையை தேடிய வானர சேனைகள் எஸ்கேப் - ஹா ஹா - அந்த இருவர் ஹனுமான் மற்றும் அங்கதன் வேடம் போட்டவர்களாக இருப்பதற்கு தான் வாய்ப்புகள் அதிகம் . ராமர் மற்றும் லட்சுமணர் வேடம் போட்ட சிறைக்கைதிகளை அனுப்பி தேட சொல்லாதீர்கள் . ஏனென்றால் அவர்களும் எஸ்கேப் ஆகலாம் .சிறையில் ராமாயணம் போட்டவர்கள், நல்ல வேளை வானர சேனை வாலில் தீ வைக்காமல் விட்டு விட்டனர் .தீ வைத்திருந்தால் சிறையில் - சாம்பலில் பூத்த சரித்திரம் என சிறைக்களம் மாறியிருக்கும் .ஹா ஹா


தமிழ்வேள்
அக் 12, 2024 14:03

அப்புறம் இந்த பாலைவன இறைத்தூதன் நாடகத்தை நினைத்தாலே பகீர்ங்குது..எல்லாம் கேட்டு ரகளை பண்ணினால் என்ன ஆகறது?


Nallavanaga Viruppam
அக் 12, 2024 13:40

இரண்டு கைதிகளின் கதாபாத்திர தேர்வு சந்தேகத்தை கிளப்புகிறதே? அந்த கதாபாத்திரத்துக்கு சாதாரண திருடர்கள் போதாதோ?


Ramesh Sargam
அக் 12, 2024 12:58

இப்ப அந்த கைதிகளை காவல்துறையினர் தேடுகின்றனர்.


பாமரன்
அக் 12, 2024 12:55

ரொம்ப நாளாச்சு... இந்த மாதிரி ரியலான சிரிப்பு நியூஸ் படிச்சு... ஆனால் அந்த கொடூர குற்றம் புரிந்தவர்கள் அப்பிடின்னு எழுதியதை படிச்சா தான் கவலையா இருக்கு... அலோ உத்தராகாண்ட் சிரிப்பு போலீஸ் கார்... சீக்கிரம் புடிங்க... ஏற்கனவே மீம்ஸ் ரைட்டர்களுக்கு செம்தியான கண்டென்ட் குடுத்துட்டீங்க...‌ரொம்ப நாள் வச்சி செய்யப்போறாய்ங்க...


Barakat Ali
அக் 12, 2024 20:13

தப்பிய இரு கைதிகளும் பல்வேறு கொடிய குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ....... இப்படி வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் போலீஸ் சிரிப்பு போலீசாக இருக்க முடியாது ..... வெடிச்சது குண்டு இல்ல ..... சிலிண்டர்தான் ன்னு சொல்லுச்சே ..... அதுதான் ரியல் சிரிப்பு போலீஸ் .... இருந்தாலும் தப்பிக்க விட்டது முட்டாள்தனம்தான் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை