உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.183 கோடி மோசடி தனியார் நிறுவன எம்.டி., கைது

ரூ.183 கோடி மோசடி தனியார் நிறுவன எம்.டி., கைது

புதுடில்லி : மத்திய பிரதேசத்தின், 'ஜல் நிகாம் லிமிடெட்' என்ற அரசு நிறுவனம் அம்மாநிலத்தில் உள்ள சத்தார்பூர், சாகர், தின்டோரி மாவட்டங்களில், 2023ல், 974 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று நீர்ப்பாசன திட்டங்களுக்கான ஒப்பந்தம் விட முடிவு செய்தது. இதை பெற, இந்துாரைச் சேர்ந்த, 'தீர்த் கோபிகான்' என்ற தனியார் நிறுவனம் 183 கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு போலி வங்கி உத்தரவாத ஆவணங்களை ஜல் நிகாமில் சமர்ப்பித்தது. இந்த மோசடிக்கு உதவிய பஞ்சாப் நேஷனல் வங்கி சீனியர் மேலாளர் கோவிந்த் சந்திரா ஹண்ட்ஷா, முகமது பிரோஸ் கான் ஆகியோரை சி.பி.ஐ., கைது செய்தது. இந்த போலி உத்தரவாத ஆவணங்களை நம்பி, தீர்த் கோபிகான் நிறுவனத்துக்கு மூன்று ஒப்பந்தங்களை ஜல் நிறுவனம் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து, 183 கோடி ரூபாய் மோசடி செய்த தீர்த் கோபிகான் நிறுவன எம்.டி., மகேஷ் கும்பானி, கவுரவ் தகாத் ஆகியோரை சி.பி.ஐ., கைது செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

visu
செப் 14, 2025 16:43

ஊழல செய்தவர்கள் காங்கிரஸ் காரர்களாக இருப்பார்கள் பிஜேபி ஆட்சில ஊழல் செய்யக்கூடாது என்று அவங்களுக்கு சட்டமா இப்ப கைது பண்ணிட்டாங்க ஒப்பந்தமும் கேன்சல் ஆகிவிடும் அது ஒன்ணும் இண்டி கூட்டணி கட்சி ஆட்சி இல்லையே


Tamilan
செப் 12, 2025 20:07

ஊழல்... மாநில பாஜ அரசின் அமைச்சர்களின் கைப்பாவை அதிகாரிகளின் துணையுடன் நடந்த மோசடிதான் இது


வாய்மையே வெல்லும்
செப் 12, 2025 08:35

உலகத்தில் நடக்கும் அணைத்து பிராடுத்தனத்துக்கும் கண்டிப்பா பின்னாடி இருப்பான். இது உலக அழிவுக்கு பெரும்கேடு ..அப்படியே நீங்க இப்போ குச்சி ஊனிட்டு பிடிபட்டவன் பிறமதம் தானே என தம்பட்டம் அடித்தால்.. வினை வித்தவனை தான் நான் முதலில் கைகாட்டுவேன் ..


Mecca Shivan
செப் 11, 2025 17:58

இது வங்கி அலுவலர்கள் நிறுவன அதிபருடன் சேர்ந்து ஏமாற்றிய விவகாரம். இதில் மாநிலத்தை ஆளும் கட்சியான பிஜேபி எந்தளவு சம்பந்தப்பட்டுள்ளது என்பதை சிபிஐ விசாரித்தால் தெரியவரும்.


JAISANKAR
செப் 11, 2025 17:09

பெயரை பாருங்கள் கும்பானி.


Mahendran Puru
செப் 11, 2025 07:36

இங்கெல்லாம் அமலாக்கத்துறை போகாதா?


James Mani
செப் 11, 2025 10:03

சார்


Subramanian
செப் 10, 2025 14:25

மத்திய பிரதேசம் அல்ல. இது மத்திய அரசின் பிரதேசம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை