உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பண மோசடி வழக்கு; அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

பண மோசடி வழக்கு; அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பண மோசடி வழக்கில், ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகுமாறு, தொழிலதிபர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.நம் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது சகோதரர் அனில் அம்பானி, 66. இவர், 'ராகாஸ்' எனப்படும் ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் கீழ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d8btbtxi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2017 - 19 வரையிலான காலக்கட்டத்தில், அனில் அம்பானிக்கு சொந்தமான ராகாஸ் நிறுவனங்களுக்கு, எஸ் வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது.ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன் சட்டவிரோதமாக பிற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.இதில், அனில் அம்பானியை மோசடியாளர் என எஸ்.பி.ஐ., வங்கி அறிவித்த நிலையில், அவருக்கு சொந்தமான 35க்கும் மேற்பட்ட இடங்களில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.இந்த வழக்கு தொடர்பாக, ஆகஸ்ட் 5ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. சோதனைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையாக, அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஆக 01, 2025 09:34

இங்கே அணில் வழக்கு. அங்கே அனில் வழக்கு. எங்கேயும் யாரையும் எதுவும் கழட்ட முடியாது. ஜெய் ஹிந்த்.


Narayanan Muthu
ஆக 01, 2025 09:23

நான் அடிக்கிறாப்போல நடிப்பேன் நீ அழுவறாப்போல அழணும். மொத்தத்துல நாம ரெண்டுபேரும் எப்பவும் போல அழுகாச்சி ஆட்டம் ஆடணும்


Ganapathy
ஆக 01, 2025 10:36

நமக்கு திராவிட களவாணி உருட்டுதான் முக்கியம்...


சமீபத்திய செய்தி