உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவாவில் சுரங்க மோசடிகள்: ஹெக்டே தகவல்

கோவாவில் சுரங்க மோசடிகள்: ஹெக்டே தகவல்

பானாஜி: கோவா மாநிலத்தில் துறைமுகம் வழியாக சட்டவிரோதமாக இரும்பு தாதுக்கள் பக்கத்து மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது குறித்து அம்மாநில அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என கர்நாடகா லோக்ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறினார். கர்நாடகா மாநிலத்தில் நடந்த சட்டவிரோத சுரங்க மோசடியினை அம்மாநில ‌லோக்ஆயுக்தா ‌ வெளிகொண்டுவந்து. இதில் மாஜி முதல்வர்கள் குமாரசாமி, எடியூரப்பா ஆகியோரின் மோசடிகள்‌ வெட்ட‌வெளிச்சமாகின. இதில் எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கர்நாடாகவின் லோக் ஆயுக்தா நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற சந்தோஷ் ஹெக்டே தற்போது கோவா மாநிலத்திலும் சட்டவிரோத சுரங்க மோசடிகள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கோவா மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள மொர்முகோவா துறைமுகம் வழியாக ஆண்டு தோறும் சுமார் 45 லட்சம் டன் இரும்பு தாதுக்கள் பக்கத்து மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்கு உள்ளூர்வாசிகள் மற்றும் அரசு அதிகாரிகளும் துணை போகின்றனர். இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கோவா அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு சந்தோஷ் ஹெக்டே கூறினார்.இந்த சுரங்க மோசடிக்கு பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் திகம்பர் காமத் பதவிவிலக வேண்டும் என பா.ஜ. வலியுறுத்தி உள்ளது.அல்லது மத்திய அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி