மேலும் செய்திகள்
மேற்கு வங்க மக்கள் பாஜவை அனுமதிக்க மாட்டார்கள்: மம்தா பதிலடி
3 hour(s) ago | 13
2025 இந்தியாவின் டாப் 10 செய்திகள் இவை தான்!
6 hour(s) ago
விஐபி தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்: ஓர் சிறப்பு அலசல்!
8 hour(s) ago | 10
கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணி இன்னும் அமையவில்லை; 'தனியாக போட்டியிடுவேன்' என கூறி விட்டார், திரிணமுல் காங்., தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி. இருப்பினும் மம்தாவிடம் கூட்டணி அமைக்க காங்., முயற்சித்து வருகிறது.இந்நிலையில், மேற்கு வங்கத்தில் சந்தேஷ்காலி விவகாரம் பூதாகரமாகி, மம்தா கட்சியின் வெற்றியை பாதிக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. இந்த ஊரில் தாதாவாக இருப்பவர் ஷாஜஹான் ஷேக்.மம்தா கட்சியைச் சேர்ந்த இவர், அமலாக்கத்துறை அதிகாரிகளை இரண்டு மாதத்திற்கு முன் தாக்கினார். பாலியல் பலாத்காரம், நில அபகரிப்பு என பல குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளன; ஆனால் கைதாகாமல் தாதா போல, போலீஸ் ஆதரவுடன் இருந்தார்.உயர் நீதிமன்றம் தலையிட்டதை அடுத்து, தற்போது அவர் கைது செய்யப்பட்டு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை பா.ஜ., கையில் எடுத்துள்ளதோடு, 'மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என, மோடி பேசினார்.'ஷாஜஹானை இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே கைது செய்திருந்தால், இந்த அளவிற்கு பிரச்னையாகி இருக்காது' என, புலம்புகின்றனர், மம்தா கட்சியினர்.'ஊழல் வழக்கு ஒன்றில், மம்தா அரசின் அமைச்சர் ஒருவருக்கும், ஷாஜஹானுக்கும் உள்ள தொடர்பை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. தேர்தல் சமயத்தில் கைது நடந்தால், பல விஷயங்கள் வெளியாகும். அது கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்பதால், ஷாஜஹானை கைது செய்யாமல் மம்தா தாமதித்து வந்தார்' என்கின்றனர் கட்சியினர்.
3 hour(s) ago | 13
6 hour(s) ago
8 hour(s) ago | 10