உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட் இன்று இரவு விண்ணில் பாய்கிறது

பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட் இன்று இரவு விண்ணில் பாய்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று (டிச.,30) இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ அறிவித்தள்ளது. இறுதிகட்ட பணியான 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று இரவு 8.58 மணிக்கு துவங்கியது.இரண்டு சிறிய விண்கலன்களை ஏவும் 'ஸ்பேடெக்ஸ்' திட்டத்துக்காக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட், ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவ, இஸ்ரோ அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2 என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் சுமந்து செல்கிறது. ஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் நேர் நிறுத்தப்பட்டுள்ள ராக்கெட்டின் உட்பகுதியில் இரு செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளன.இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று (டிச.,30) இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ அறிவித்தள்ளது. இறுதிகட்ட பணியான 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று இரவு 8.58 மணிக்கு துவங்கியது. தனித்தனியாக இரு விண்கலங்களை விண்ணில் ஏவி அவற்றை இணைய செய்வதற்கான சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த 4வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கவும், விண்வெளிக்கு வீரர்களை அனுப்பவும் இந்த திட்டம் பேருதவியாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

MARI KUMAR
டிச 29, 2024 09:57

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்


sundarsvpr
டிச 29, 2024 09:51

மத்திய அரசு சாதனை செய்திட எல்லா நடவடிக்கைகள் எடுக்கின்றன. நம் மாநில அரசு அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த பாலியில் போன்ற நிகழ்வுகளில் முனைப்புக்காட்டுகின்றன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை