உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதுச்சேரி பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை!

புதுச்சேரி பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி; புதுச்சேரி பல்கலையில் மாணவி ஒருவருக்கு 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை அண்ணா பல்கலையில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாகவும் இந்த சம்பவம் பெரிதாக பேசப்பட்டது. இந் நிலையில், அதே போன்றதொரு சம்பவம் புதுச்சேரி பல்கலையில் அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு; காலாப்பட்டு பகுதியில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒரு விடுதியில் தங்கி முதலாமாண்டு பயின்று வருகிறார். கடந்த ஞாயிறு விடுமுறை என்பதால் பல்கலை வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் சக மாணவருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த இடத்துக்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அந்த மாணவரை விரட்டிவிட்டு, மாணவியிடம் அத்துமீறியதாக தெரிகிறது.மர்ம கும்பலிடம் இருந்து மாணவி தப்பித்து ஓடிய போது காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாணவி கூச்சலிடவே 3 பேரும் தப்பித்துச் சென்றுள்ளனர். பின்னர், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவி விடுதி திரும்பி உள்ளார். தமக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் பல்கலை நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மாணவியிடம் அத்துமீறியது அதே பல்கலையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர் என்பதும், மற்ற இருவரையும் அவர்தான் உடன் அழைத்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Kanns
ஜன 15, 2025 12:39

No Dearths of False Complaints by Vested FalseComplaint Gangs, NewsHungry Media& CaseHungry Criminals as None of them Get Punished. Here SexHungry Girl& Boy Indulged in AntiSocial PublicNuisance-Sex-Crime in Public Places


Nandakumar Naidu.
ஜன 14, 2025 18:51

உடனே அந்த குற்றாவளிகளை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து தூக்கில் போட வேண்டும்.


abdulrahim
ஜன 14, 2025 18:32

ஹ்ம்ம் தமிழ்நாட்டில் வந்தா ரத்தம் ஆனா பாஜக ஆளும் மாநிலங்களில் வந்தா இதுக்கு பேரு தக்காளி சட்னி.


abdulrahim
ஜன 14, 2025 18:31

சாங்கி தண்ட கருமாந்திரங்கள் எப்படி எஸ்கேப் அகுரானுங்க பாருங்க , குற்றவாளியை கைது செய்தும் தமிழக அரசை அரசியலுக்காக திட்டி தங்கள் வன்மத்தை கக்கினானுங்க ஆனா இப்போ என்னமோ சமூக அக்கறை உள்ளவனுங்க மாதிரி பட்டும் படாமல் அட்வய்ஸ் கருத்தா எழுதி தப்பிக்கிறானுங்க , நடுநிலை நக்... ஏடுகளும் வாய் ஊமையாகி போய்விட்டன , எங்கே அந்த யோக்கியன் இந்நேரம் ஒரு பஞ்சு சாட்டையை தூங்கிட்டு கிளம்பி இருப்பானே ????


Rajarajan
ஜன 14, 2025 18:01

திராவிட அல்லக்கைகளிடம் ஒரு கேள்வி. பிராமணர் எதாவது தவறு செய்தால், போட்டிபோட்டுக்கொண்டு விவாதம் நடத்துவீர்கள், இப்பொது பாலியல் தொல்லை என்பது, பிராமணர் அல்லாத பிரிவினர் துணிச்சலுடன் செய்கின்றனர். இப்போது பிராமணர் அல்லாதவர் சங்கங்கள் / திராவிடர் ஒன்றுசேர்ந்து, இவற்றை கண்டித்து அறிக்கை விடாதது / தொலைக்காட்சி விவாதம் நடத்தாதது ஏன் ?? அவரின் சீடர்களின் வழிகாட்டுதலில், தமிழ் சமூகம் தரம்தாழ்ந்து சென்றுகொண்டுள்ளது. ஆனால், இவர்களின் பெண் வாரிசுகள் மட்டும் பாதுகாப்புடன் உள்ளனர். இதை தட்டிக்கேட்காதது தான், சொரியான் சீடர்களின் பகுத்தறிவா ??


Ram pollachi
ஜன 14, 2025 17:22

கேட்டால் ஒரு பெண்ணுக்கு மற்றோரு பெண் எதிரி என்ற பதில் கிடைக்கும். நான்கு பையன் ஒரு பெண் இப்படி தான் ரோட்டில் பார்க்க முடிகிறது.... கைபேசியின் வளர்ச்சியால் அடுத்த தலைமுறை சர்வ நாசம் அடைவது உறுதி... தினமும் ஏகப்பட்ட சமாச்சாரம் நடக்குது அதில் சில மட்டும் முக்கிய செய்தியாகிறது....


AMLA ASOKAN
ஜன 14, 2025 14:16

பல்கலை வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் சக மாணவருடன் பேசிக்கொண்டு இருந்தார் என்பது தவறு. படிக்க போன இடத்தில் காதல் வயப்பட்டு தன் காதலனுடன் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தார் எனபது தான் உண்மை . அண்ணா யூனிவர்சிட்டி மாணவியை போல் பயப்படாமல் இந்த வீர மங்கை அந்த 3 பேர் கொண்ட கும்பலை எதிர்த்து போர் புரிந்து ஜெயித்து விட்டு விடுதி திரும்பியுள்ளார் . இதில் முக்கியம் அந்த 3 பேர் எந்த கட்சியை சார்ந்தவர்கள் , அவர்களுக்கு பின்னால் உள்ள சார்கள் எத்தனை பேர் என்ற ஆராய்ச்சி தான். புதுச்சேரி முதல் அமைச்சரும், போலீஸ் கமிஷனரும் வகையாக சிக்கி கொண்டார்கள் .பிடிபட்ட குற்றவாளி அப்பாவியாக நிம்மதியாக ஜெயிலில் தூங்கிக்கொண்டு இருப்பார் . நமக்குத் தேவை அரசியலுக்கான விமர்சனங்கள் .


sundarsvpr
ஜன 14, 2025 13:58

மாணவ மாணவிகள் பாடம் படிப்பதில் மாற்றம் தேவை. அதாவது எழுதுதல் ஒப்பித்தல் மாலை விளையாடுதல். moral வகுப்புகள் இவைகள் இருந்தால் வெளி கவனம் குறையும். மன சிதறல் குறையும் தலையை நன்றாக வாருதல் நெற்றியில் ஆன்மிக சின்னம் தவிர்த்தல் நல்லது அல்ல.


Raj
ஜன 14, 2025 13:32

அப்போது சென்னை, இப்போ பாண்டிச்சேரியா இது என்ன ...


தமிழ்வேள்
ஜன 14, 2025 13:21

அதென்ன மாணவி இன்னொரு மாணவியோடு பேச மாட்டாரா? மாணவர் மட்டும் தான் கிடைப்பாரா?


முக்கிய வீடியோ