உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புனேவில் கார், பஸ் மீது லாரி மோதி விபத்து; 9 பேர் பரிதாப பலி

புனேவில் கார், பஸ் மீது லாரி மோதி விபத்து; 9 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நாராயன்கவுன் பகுதியில், கார், பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நாராயன்கவுன் பகுதியில், கார், பஸ் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில், 9 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியை டிரைவர் அதிவேகமாக இயக்கியது தான் விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. கார் நிலைதடுமாறி அந்த வழியாக வந்த பஸ் மீது மோதியது. ஒரே நேரத்தில், கார், பஸ் மற்றும் லாரி ஆகிய மூன்றும் விபத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த 9 பேரும் காரில் பயணம் மேற்கொண்டனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து புனே ரூரல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Subramanian
ஜன 17, 2025 18:38

மிகவும் சோகமான நிகழ்வு. ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி...


அப்பாவி
ஜன 17, 2025 13:18

சும்மா நின்னுக்கி ட்டிருந்தாலே வந்து போட்டு தள்ளிடறாங்க. கர்மயோகி மாதிரி நிக்காம போய்க்கிட்டே இருக்கணும். நிக்கணும்னா ரோட்டுக்கு 100 மீட்டர் தள்ளி நின்னு டீ குடிக்கணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை