உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் பஞ்சாப் அரசு: ஹரியானா அரசு பகீர் குற்றச்சாட்டு

விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் பஞ்சாப் அரசு: ஹரியானா அரசு பகீர் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ‛‛ விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்ளதாக சந்தேகம் உள்ளது '' என ஹரியானா கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் சந்தேகம் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அரசு தூண்டி விடுவதாகவும் கூறியுள்ளார்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி முற்றுகை போராட்டத்திற்கு பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் பேரணியாக செல்கின்றனர். இதனால், டில்லி எல்லையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், ஹரியானா மாநில கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் கூறியதாவது: விவசாயிகளுக்காக பா.ஜ., அரசு செய்த பணிகளை, அதற்கு முன்னர் வேறு எந்த அரசும் செய்தது கிடையாது. நாங்கள் விவசாயிகளுக்கு ஆரவாக தான் உள்ளோம். இந்த போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்ளதாக சந்தேகம் உள்ளது. பொருளாதார ரீதியாக விவசாயிகள் பலம் பெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அனைத்து பிரச்னைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும். விவசாயிகள் திருப்தி உடன் தான் உள்ளனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபடுபவர்களே அனைத்திற்கும் காரணம். இந்த அரசை விட சிறந்த அரசு வேறு இல்லை என சாமானிய விவசாயிகள் புகழாரம் சூட்டுகின்றனர். பஞ்சாப் அரசு போராட்டத்தை தூண்டி விடுகிறது. வன்முறையை தூண்டுகின்றனர். போராட்டத்தின் பின்னணியில் அம்மாநில அரசு உள்ளதால், வன்முறை பெரிதாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

J.V. Iyer
பிப் 14, 2024 06:27

பாகிஸ்தானை ஒருவழி ஆகியதைப்போல, இந்த கலவரத்தை அப்படியே பஞ்சாபுக்கு திருப்பிவிட்டால் அவர்கள் நிலை என்ன?


Balaji
பிப் 13, 2024 22:58

என்ன காரணத்திற்க்காக மத்திய அரசை எதிர்த்து போராடுகிறார்கள்? பிற மாநில விவசாயிகளுக்கு இல்லாத பிரச்சினை இவர்களுக்கு என்றால் அப்போது அந்த மாநில (பஞ்ஜாப்) அரசு தானே காரணம்?


sankaranarayanan
பிப் 13, 2024 20:28

முதலில் பஞ்சாப் விவசாயிகளை ள் கமிசன் ஏஜெண்ட்ட்டுகள் கைப்பாவையாக இருப்பதை ஒழிக்க வேண்டும் அந்த இடைத்தரகர் தங்களது வாழ்கைக்காக பஞ்சாப் விவசாயிகளை பலியிடுகின்றனர் பாரதத்தில் எந்த மாநில விவசாயிகளும் இந்த இடைத்தரகர்களை ஆதரவு கொடுப்பதில்லை பன்ஜாப்பிலும் இந்த நிலைமைமார அரசாங்கமே விவசாயிகளை நேராக சந்தித்து இடைத்தரகர் கமிஷனை விவசாயிகளிடம் நேராகவே கொடுக்க ஏற்பாடு செய்தால் இடைத்தரகர்கள் அழிந்துவிடுவார்கள் விவசாயிகள் வாழ்க்கைத்தரம் உயரும் போராட்டமே இருக்காது


Godfather_Senior
பிப் 13, 2024 20:25

உண்மை அதுவே இப்போது இதில் காங்கிரசும் கைகோர்த்துக்கொண்டுள்ளது . அரசியல் விபரீதத்திற்கு காங்கிரசும் ஆம் ஆத்மீ கட்சியும் ரகசிய கூட்டில் உள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி போலவே தெரிகிறது . விநாச காலே விபரீத புத்தி என்பது வழக்குச்சொல் . இது ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரசுக்கும் அழிவு காலம் நெருங்கிவிட்டதையே காட்டுகிறது .


K.Ramakrishnan
பிப் 13, 2024 19:11

உங்களை நீங்களே மெச்சிக்கொண்டால்எப்படி? ஒரு அரசு சிறந்த அரசு என்று மக்கள் தான் கூற வேண்டும். எதற்கெடுத்தாலும் மற்றவர்களை குறை கூறினால் நீங்கள் கையாளாகாதவர்கள் என்றே அர்த்தம். நேரு மறைந்து அறுபது ஆண்டுகள் ஆன பிறகும் அவரை பழி சுமத்தியே பத்தாண்டுகளை கடத்தி விட்டனர். இறந்தவர்களை பழி சுமத்தக்கூடாது என்ற பொதுவான நியதியையே மீறி விட்டார்களே...


visu
பிப் 14, 2024 08:13

நேரு செய்த தவறு ஆகஷை சின் சீனாவிடம் மாட்டி கொண்டுள்ளது அப்புறம் இன்னைக்கு சீன பற்றி பேசினால் அதை பற்றி பேசித்தான் ஆகா வேண்டும்


visu
பிப் 14, 2024 08:15

அரசு நல்லது செய்கிறது என்பதால் தான் மக்கள் தனி மஜுரிட்டி உடேன தொடர்ந்து வாய்ப்பளிக்கிறார்கள் அப்புறம் நன்றாக செயல்படுகிறது என்று சான்று அது போதாதா எதிர் கட்சி எப்பவும் குறைதான் சொல்லும்


RAMAKRISHNAN NATESAN
பிப் 14, 2024 09:31

\\\\ இறந்தவர்களை பழி சுமத்தக்கூடாது என்ற பொதுவான நியதியையே மீறி விட்டார்களே.... //// திமுக அடிமையே ..... இறந்த எம் ஜி ஆர் மற்றும் ஜெ பற்றி அவதூறு பேசித்தானே ஆட்சிக்கு வந்தது உன் கட்சி ????


Apposthalan samlin
பிப் 13, 2024 14:33

விவசாயிக்கு தான் கஷடம் நஷடம் தெரியும் குளிர் சத்தான ரூமில் இருந்தால் ஒன்னும் தெரியாது உரங்கள் பூச்சி மருந்து எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் மானியம் கிடைத்தது விவசாயத்தில் லாபம் இருந்தது இப்பொழு வரவும் சிலவும் ஒன்னு போல் உள்ளது எல்லா பொருட்களும் விலை வாசி ஏறிவிட்டது .அனால் விவசாய விலை பொருட்கள் கடந்த இருபது வருடமாக அதே விலை .


sankar
பிப் 13, 2024 14:52

புளுகு மூட்டை


மதுரை வாசு
பிப் 13, 2024 15:18

இந்தியா முழவதும் விவசாயிகள் இருக்கிறாகல். ஆவரவர் உழைத்து சந்தோசத்துடன் வாழ்ந்துகொண்டுதான் உள்ளார்கள். ஆனால் பஞ்சாப் விவசாயிகள் மட்டும்தான் அவங்க உரைவிட்டு கிட்டத்தக 300கிமீ தூரமுள்ள டெல்லிக்கு வந்து போராடுகிறார்கல். அந்த மர்மம்தான் இடிக்குது. போனமுறை மாதக்கணக்கில் டெல்லியில் தங்கியிருந்தார்கள் என்றால் அவர்கள் எவ்வெலவு பெரிய கோடீஸ்வரர்களாக இருக்கவேண்டும். நீங்கள் சொல்லும் வரவும், செலவும் ஒன்னுபோல் இருந்தால் அவர்கல் ஏன் இப்படி குடித்து கும்மாலம்போடவேண்டும்


Apposthalan samlin
பிப் 13, 2024 16:25

நாம ஊர் விவசாயி ஒப்பேட்டு பார்க்கும் பொழுது அவர்கள் கொஞ்ச அதிகமான வருமானம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்


visu
பிப் 13, 2024 18:37

பஞ்சாபில் மத்திய அரசு விவசாயிகளுக்கு நேரடியாக மானியம் வழங்க விரும்பியது அதனால் அங்கே கமிசன் ஏஜெண்ட்ட்டுகள் பாதிக்க படுவர் அவர்கள் விவசாயிகளை மத்திய அரசுக்கு எதிராக தூண்டி விவசாய சட்டங்களை உருப்படாமல் செய்தனர் இப்பவும் மாநில ஆப் அரசு தூண்டி விட வாய்ப்பு அதிகம் ஏனென்றால் தேர்தல் நெருக்கத்தில் இது நடை பெறுகிறது பேசாமல் தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன்பிருந்து எந்த முக்கிய முடிவுகளும் எடுக்க கூடாது என்று சட்டம் போட்டு விடலாம் இல்லை ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வந்து விடலாம் அப்படியே ஒரு எம்பீ தொகுதி ஒரு மாநிலம் போல ஆகிவிடலாம்


Sivagiri
பிப் 13, 2024 14:27

அர்பன் நக்சலைட்டுகள் என்று அழைக்கப்படும் ஆம ஆத்மீயும் அதன் தற்போதைய கூட்டாளிகளான காலிஸ்தானிஸ்டுகள் , மற்றும் பாகிஸ்தானிஸ்டுகள் , தற்போதைய கனடா மிஷனரி- கன்வெர்டிஸ்ட்டுகள் - இதன் மொத்த உருவம்தான் டில்லியை சுற்றி வளைத்து நிற்கன்றன -


Apposthalan samlin
பிப் 13, 2024 14:26

msp arasu ean seiyamatenkirathu விலை பொருட்களுக்கு குறைந்த ஆதார விலை கேட்கிறோம் ஆதார விலை இருந்தாலே காய்கறிகளை ரோட்டிலும் ஆற்றிலும் கொட்ட மாட்டார்கள்


Kalyan Singapore
பிப் 13, 2024 13:40

பி ஜெ பி யின் அரசு மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க எதிர்க்கட்சிகள் செய்யும் கடைசி முயற்சி. இதில் கனடா வின் பங்கும் இருக்கலாம்


S.Bala
பிப் 13, 2024 13:35

கண்டிப்பாக ஏனெனில் பதினேழாம் தேதி ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும்.ஊடகங்களில் அதை மறைக்க இது பெரிதாக காட்டப்பட வேண்டும். பாவம் இவர்களும் 200 ரு உபி போல


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை