| ADDED : ஜூன் 04, 2025 11:43 AM
சண்டிகர்: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக, பஞ்சாப் யூடியூபர் ஜஸ்பீர் சிங் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜோதி மல்ஹோத்ராவுடன் தொடர்பு உள்ளது.ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. யுடியூபில், 'டிராவல் வித் ஜோ' என்ற பெயரில் பயண சேனல் நடத்தி வரும் இவரை, பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் ஹரியானா போலீசார் கைது செய்தனர். அவரது லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y4xpz2et&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக, பஞ்சாப் யூடியூபர் ஜஸ்பீர் சிங் கைது செய்யப்பட்டார். இவர் ஜான் மஹால் என்ற சேனலை நடத்தி வருகிறார். இது குறித்து பஞ்சாப் டி.ஜி.பி.,கவுரவ் யாதவ் கூறியதாவது: 'ஜான் மஹால்' என்ற யூடியூப் சேனலை நடத்தும் ஜஸ்பீர் சிங், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்துள்ளார். இவர் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய தலைவர்களுடன் தொடர்பில் இருந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர் மூன்று முறை (2020, 2021, 2024) பாகிஸ்தானுக்கு பயணம் செய்தார். மேலும் அவரது மொபைல் போனில் பல பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எண்கள் இருந்தன. ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட பிறகு, ஜஸ்பீர் பாகிஸ்தானுடன் தனது தொடர்புகளின் அனைத்து தடயங்களையும் அழிக்க முயன்றார். இவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதிலும், அத்தகைய தேச விரோத சக்திகளால் ஏற்படும் அனைத்து அச்சுறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.