உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தள்ளு...தள்ளு...தள்ளு... : போலீஸ் வாகனத்தை தள்ளிய பீகார் கைதிகள்

தள்ளு...தள்ளு...தள்ளு... : போலீஸ் வாகனத்தை தள்ளிய பீகார் கைதிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: போலீஸ் வாகனத்தில் டீசல் இல்லாததால் கைதிகள் வண்டியை தள்ளி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் மது அருந்தியதாக சிலரை போலீசார் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக போலீசார் தங்களுடைய வாகனம் மூலம் அழைத்து சென்றனர். கைதிகளுக்கு பாதுகாப்பாக இன்ஸ் பெக்டர் மற்றும் போலீசார் உடன் சென்றனர். கச்சாஹரிசெளக் என்ற இடம் சென்ற போது வாகனம் திடீரென நின்று போனது. நின்றதற்கான காரணத்தை ஆராய்ந்த போது வாகனத்தில் எரிபொருள் தீர்ந்து போனது தெரியவந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zphvtmh6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வாகனம் நின்ற இடத்திற்கும் கோர்ட்டிற்கும் இடைப்பட்ட தூரம் அரை கிலோமீட்டர். உடனடியாக போலீசாருக்கு சமயோசித திட்டம் உருவானது. இதனையடுத்து கைதிகள் அனைவரும் வாகனத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் கயிற்றால் இடுப்பு பகுதியுடன் சேர்த்து கட்டப்பட்டனர். பின்னர் கைதிகள் வாகனத்தை தள்ளி விட பணிக்கப்பட்டனர். கைதிகள் வாகனத்தை தள்ளி செல்லும் போது போலீசார் அவர்கள் கண்காணித்த படியே பின் தொடர்ந்து செல்கின்றனர். இது குறித்த வீடியோ வைரலானதை அடுத்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மூத்த காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

katharika viyabari
பிப் 05, 2024 14:05

இவர்கள் இந்த வண்டியை தள்ளி போலீசாருக்கு உதவியதால்.. தண்டனையை கொஞ்சம் குறைத்து கொடுங்கள் உவர் ஆனர்.


ஆரூர் ரங்
பிப் 05, 2024 12:08

இங்கு மட்டும் என்ன வாழுது?.????பெரும்பாலான அரசு வாகனங்கள் சாலையில் செல்லவே தகுதியற்றவை.


g.s,rajan
பிப் 05, 2024 05:54

தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க,எண்ணெய் விலை ஏறிப்போச்சு மாட்டைப் பூட்டுங்க ,கோபாலா தள்ளுப்பா ...???


Ramesh Sargam
பிப் 04, 2024 23:49

தமிழகத்தில் இப்படி கைதிகள் இறக்கிவிடபட்டிருந்தகால், அவர்கள் தப்பி ஓடியிருப்பார்கள்.


Venkatasubramanian krishnamurthy
பிப் 04, 2024 22:35

எரிபொருளுக்கான முன்னேற்பாடு இல்லையென்றாலும் கைதிகளைக் கட்டுவதற்கு சமயோசிதமாக கயிறு எடுத்துச் சென்ற காவலர்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.


Gopalan
பிப் 04, 2024 22:20

ஒவ்வொரு குற்றவாளியும் கடுமையான உடல் உழைப்பை செய்தால், அவர்களின் மனநிலை சரியான பாதைக்கு மாறும். வாழ்க்கையின் அந்தஸ்துக்கு ஏற்ப குளிரூட்டப்பட்ட சிறை அறைகளில் அவர்கள் தண்டிக்கப்படக்கூடாது. மாறாக அவர்கள் கடினமான உடல் உழைப்பை செய்தால், எதிர்காலத்தில் எந்த குற்றத்தையும் செய்ய பயப்படுவார்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை