உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் டாப் பல்கலை; ஐ.ஐ.டி., மும்பையை முந்தியது ஐ.ஐ.டி., டில்லி!

இந்தியாவின் டாப் பல்கலை; ஐ.ஐ.டி., மும்பையை முந்தியது ஐ.ஐ.டி., டில்லி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவின் சிறந்த பல்கலை பட்டியலில், ஐ.ஐ.டி., மும்பையை, ஐ.ஐ.டி., டில்லி முந்தியது. ஐ.ஐ.டி., டில்லி 44வது இடத்தில் உள்ளது.வரும் 2025ம் ஆண்டுக்கான க்யூ.எஸ்., ஆசிய பல்கலை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 6 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இந்திய பல்கலைகளில் ஐ.ஐ.டி., டில்லி முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 46வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு 44வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், பட்டம் பெற்றவர்களின் வாழ்க்கை முன்னேற்றங்கள் ஆகியவை ஐ.ஐ.டி., டில்லி தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளதற்கு காரணமாக கருதப்படுகிறது. 'ஐ.ஐ.டி., டில்லியின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்த நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தொழில்நுட்ப முன்னேற்றம், ஸ்டார்ட்அப்கள் மற்றும் சமூகத்திற்கு பெரிய அளவில் உதவும் சிக்கல்களைத் தீர்ப்பதில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது,' என்று ஐஐடி- டில்லி தரவரிசைப் பிரிவின் தலைவர் பேராசிரியர் விவேக் தெரிவித்தார்.ஐ.ஐ.டி., டில்லியைத் தொடர்ந்து, ஐ.ஐ.டி., மும்பை இந்திய நிறுவனங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட எட்டு இடங்கள் சரிந்தாலும் 48வது இடத்தைப் பெற்றுள்ளது. ஐஐடி சென்னை 53வது இடத்திலிருந்து 56வது இடத்துக்கும், ஐஐஎஸ்சி பெங்களூரு 58வது இடத்திலிருந்து 62வது இடத்துக்கும், ஐஐடி கான்பூர் 63வது இடத்திலிருந்து 67வது இடத்துக்கும் சரிவை கண்டுள்ளன.

'டாப்' 100 இடங்களில் 6 இந்திய கல்வி நிறுவனங்கள்;

ஐ.ஐ.டி., டில்லி - 44வது இடம்ஐ.ஐ.டி., பாம்பே- 48வது இடம்ஐ.ஐ.டி., மெட்ராஸ்- 56வது இடம்ஐ.ஐ.டி., காரக்பூர்- 60 வது இடம்ஐ.ஐ.எஸ்.சி., பெங்களூரு- 62வது இடம்ஐ.ஐ.டி., கான்பூர்- 67வது இடம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

MARI KUMAR
நவ 12, 2024 17:14

இந்திய கல்வி நிறுவனங்கள் வளர்ச்சியடைவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் மேலும் வளர்ச்சி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை