உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தோ - பசிபிக்கில் இணைந்து செயல்பட 20வது ஆண்டு நிறைவில் குவாட் உறுதி

இந்தோ - பசிபிக்கில் இணைந்து செயல்பட 20வது ஆண்டு நிறைவில் குவாட் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்திய பெருங்கடலில், 2004ல் ஏற்பட்ட கடுமையான பூகம்பம் மற்றும் சுனாமியை தொடர்ந்து, ஒத்துழைத்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டது 'குவாட்' அமைப்பு.இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. தென்சீனக் கடலின் பெரும்பகுதியை சீனா உரிமை கோருவதுடன், கடல்சார் பாதுகாப்பில் தன் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதையடுத்து, இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் இடையே உள்ள இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு, வணிகம், அமைதி உள்ளிட்டவற்றில், குவாட் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.அமைப்பு துவங்கப்பட்டு, 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளனர். அதில், 'இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் நலனுக்காக தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்' எனக் கூறப்பட்டுள்ளது. குவாட் அமைப்பின் அடுத்த மாநாடு, இந்தியாவில் இந்தாண்டின் இரண்டாம் பகுதியில் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஜன 01, 2025 07:59

முக்கியமாக தைவான் விஷயத்தில் சீனாவை பயத்தில் வைத்திருப்பது சிறப்பு.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 01, 2025 06:57

என்ன இருந்தாலும், நான் போயி ட்ரம்ப் வந்தாலும், நாங்க அப்பப்ப அதானியைத் தொட்டுப் பார்ப்போம் ... பைடன் ...


கிஜன்
ஜன 01, 2025 04:39

ஆமா .... டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு ....ஜி க்கு அழைப்பில்லையாமே .... சு.சாமி ...சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கிறார் ...


ghee
ஜன 01, 2025 07:08

கிஜன். நீ ஒரு டஜன் பொய் சொல்லலாம்.. 200 ரூபாய் கூலிக்கு என்ன வேணும்னாலும் பேசுவே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை