உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தடுப்பூசி போட்ட பிறகும் சிறுமிக்கு பரவிய ரேபிஸ் நோய்; கேரளாவில் மற்றொரு சம்பவம்

தடுப்பூசி போட்ட பிறகும் சிறுமிக்கு பரவிய ரேபிஸ் நோய்; கேரளாவில் மற்றொரு சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் நாய்க்கடிக்கான தடுப்பூசியை போட்ட பிறகும், குழந்தைகள் ரேபிஸ் நோயால் பாதிக்கப்படுவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த மாதம் 7 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த தெருநாய் ஒன்று சிறுமியை கடித்துள்ளது. இதனை அறிந்த பெற்றோர், சிறுமியை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி கொடுத்த பிறகு, தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமிக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்து போட்ட பிறகு, ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஒரு மாதத்திற்குப் பிறகு அந்த சிறுமிக்கு தீராத காய்ச்சல் ஏற்பட்டதால், திருவனந்தபுரத்தில் உஙளள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஸ்ரீ அவிட்டம் திருநாள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்ததில், அவருக்கு ரேபிஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசியை போட்டுக் கொண்ட பிறகும், சிறுமிக்கு அந்த தொற்று பரவியதால், தடுப்பூசியின் தன்மை மீது அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, மலப்புரத்தில் 6 வயது சிறுமி, தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும், உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மற்றொரு சிறுமியும் பாதிக்கப்பட்டிருப்பது தடுப்பூசியின் மீது பெற்றோருக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீ அவிட்டம் திருநாள் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் எஸ்.பிந்து கூறுகையில், 'துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு தடுப்பூசிகள் மீது குறை கூற முடியாது. காயத்தின் தீவிரம் மற்றும் நோய்த்தொற்று பரவலின் தன்மையை பொறுத்து தடுப்பூசிகளின் செயல்திறன் இருக்கும்,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மே 03, 2025 19:29

மருத்துவமனையின் கண்காணிப்பாளர் எஸ்.பிந்து கூறுவது சப்பைக்கட்டு .... பொய் ..... 24 மணிநேரத்துக்குள் தடுப்பூசி செலுத்தப்பட்டும் ராபீஸ் ஏற்பட்டால் மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பு .....


குடந்தை செல்வகுமார்
மே 03, 2025 19:16

தெரு நாய்கள் கட்டுப்படுத்தும் திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளால் பிரச்சினைகள் தீவிரமடையும்


sridhar
மே 03, 2025 18:55

Some vaccines must be continuously in cold storage. If , for some reason like power cut they come to normal temperature for even one hour they lose their potency and medical value. A few years ago a Palghat woman was administered rabies vaccine immediately after dog bite but she died of rabies.


ஆரூர் ரங்
மே 03, 2025 18:50

எந்தத் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமும் 100 சதவீத மக்களுக்கும் முழுமையான பலனளிக்கும் என்று கூறுவதில்லை. வேறெந்த மருத்துவ முறையும் கூட எல்லா வியாதிகளுக்கும் முழுமையான நிவாரணம் அளிக்கும் என்று உறுதியளிப்பதில்லை. தடுப்பூசியை நம்பி தெரு நாய்களை ஒழித்துக் கட்டாமல் விடுவது தவறு.


Ram
மே 03, 2025 18:38

தெருநாய்களை ஒழித்துக்கட்டுவதுதான் சரியான தீர்வாக இருக்கும்


Padmasridharan
மே 03, 2025 18:38

காயத்தின் தீவிரத்தைப் பார்த்துதானே ஊசி போடுவாங்க. அப்படி பார்த்தாலும் ஊசி போட்டவரின் தவறுதான் இது


Ramanathan Srinivasan
மே 03, 2025 18:07

உண்மையில் தடுப்பு ஊசி என்பது நாய் கடிப்பதற்கு முன்னால் போடவேண்டும் , 3 அல்லது 4 முறை 14 நாட்களில் போட்டால் சில வருடங்களுக்கு ரேபிஸ் வராது. நாய் கடித்த பிறகு RIG Rabies immuno globulin என்ற ஊசிதான் நிசசயமாக பாதுகாக்கும், இது கடித்த இடத்தை சுற்றி போடுவது. அதுவும் 48 மணிக்குள் போடவேண்டும். நாய் கடித்த பிறகு தடுப்பு ஊசி போடுவது பல நேரங்களில் போதுமானதாக இருந்தாலும், சில சமயங்களில் நோயிலிருந்து பாதுகாக்காது . தடுப்பு ஊசி விலை சில நூறுகள் இருக்கலாம், RIG பல ஆயிரங்கள் இருக்கும். இதனாலேயே பெரும்பாலான சமயம் நாய் கடித்த பிறகும் தடுப்பு ஊசி போட்டு விட்டு விடுகிறார்கள். அது வேலை செய்யவில்லை என்றால் ஊசியில் குறை சொல்ல முடியாது, நம் செயல் முறையில்தான் கோளாறு


புதிய வீடியோ