உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ், பா.ஜ.,: ராகுல் குற்றச்சாட்டு

அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ், பா.ஜ.,: ராகுல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: இந்திய அரசியலமைப்பை அழிக்கவும், மாற்றவும் ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ., முயற்சித்து வருவதாக கேரளாவின் வயநாடு தொகுதியில் நடந்த 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம்சாட்டினார்.காங்கிரஸ் எம்.பி., ராகுல், லோக்சபா தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா, பா.ஜ., சார்பில் மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகின்றனர். இன்று (ஏப்.,16) வயநாடு தொகுதிக்கு உட்பட்ட கோடியத்தூர் பகுதியில் ராகுல் 'ரோடு ஷோ'வில் பங்கேற்றார். காங்கிரஸ் தொண்டர்கள் அவரது காரை சூழ்ந்துக்கொண்டு ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திசை திருப்புகிறார்

தொண்டர்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: இந்திய அரசியலமைப்பை அழிக்கவும், இந்திய அரசியலமைப்பை மாற்றவும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ., முயற்சித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் இண்டியா கூட்டணியும் அரசியல் சட்டத்தை காப்பாற்ற முயற்சிக்கின்றன. நரேந்திர மோடி, இந்தியாவின் மிகப்பெரிய 5, 6 பணக்காரர்களின் கருவியாக இருக்கிறார். உண்மையான பிரச்னைகளில் இருந்து இந்திய மக்களை திசை திருப்புவதே அவரது குறிக்கோள்.அதனால்தான் சில சமயங்களில் கடலுக்கு அடியில் பூஜை செய்வதைப் பார்த்திருப்பீர்கள்... அதுமட்டுமல்ல, ஒலிம்பிக்கை இந்தியாவுக்குக் கொண்டு வருவோம் என்கிறார், நிலவுக்கு மனிதனை அனுப்பப் போகிறோம் என்று சொல்வார். ஆனால், வேலையில்லா திண்டாட்டம் அல்லது விலைவாசி உயர்வு பற்றி அவர் பேசுவதே இல்லை. மோடி, நாட்டின் பணக்காரர்களைப் பாதுகாத்து அவர்களின் வங்கிக் கடனையும் தள்ளுபடி செய்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

பேசும் தமிழன்
ஏப் 16, 2024 20:21

சுமார் 500 MP க்கள் இருந்த கான் கிராஸ் கட்சியை.... 50 MP க்கள் கொண்டதாக சுருங்கியது தான் இத்தாலி பப்பு குடும்பத்தின் சாதனை !!!!


பேசும் தமிழன்
ஏப் 16, 2024 20:18

பப்பு உனக்கு ஒன்றும் தெரியாவிட்டால்.... சும்மா இருக்க வேண்டும்.... இப்படி டாஸ்மாக் போட்டது போல் வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு இருக்க கூடாது.


M S RAGHUNATHAN
ஏப் 16, 2024 17:48

The Congress and its past presidents have no right to criticize RSS


M S RAGHUNATHAN
ஏப் 16, 2024 17:46

You should be ashamed that your Congress cadre can not hold or take your partys flag in your rallies and meetings in Wayanad, the constituency in which you are coning Dont you feel ashamed? Instead you could have quit coning The Muslim League has the adaucity to direct and instruct no Congress flags should be there and only Muslim League flags alone can be carried and your KPCC president is timid and accepted it You endorsed it Shame on you Raul Vinci


Varadarajan Nagarajan
ஏப் 16, 2024 17:42

திருத்தங்கள் எதையுமே செய்யகூடாத ஒன்றானதா நமது அரசியல் சாசனம்? அப்படியென்றால் இதற்க்கு முன்பெல்லாம் திருத்தங்கள் செய்யப்படவில்லையா? அது என்ன உங்கள் பாட்டி செய்தால் சரி பிறகு வரும் தலைவர்கள் செய்தால் சரியில்லை? மாற்றங்கள் நிகழ்ந்துவரும் உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை கால சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான மாற்றங்கள் இல்லையென்றால் அது அழிந்துபோகும் நமது அரசியல் சாசனம் மக்களுக்கானது எனவே அதுவும் தேவையான மாற்றங்களை பெறவேண்டும் நீங்களும் உங்கள் கட்சியும்தான் நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க பிறந்தவர்களா?


என்றும் இந்தியன்
ஏப் 16, 2024 16:04

ஆர் எஸ் எஸ் பிஜேபி இந்தியாவிற்காக இந்திய மக்களுக்காக எல்லா செயல்களும் செய்கின்றார்கள் நீங்கள் காங்கிரஸ் முதல்திமுக வரை வெறும் பணம் பணம் பணம் தன் குடும்ப மக்களுக்காக எல்லா தகிடுதத் தமும் செய்கின்றீர்கள்


Duruvesan
ஏப் 16, 2024 15:55

அமேதில நின்ன விடியல் பிரச்சாரம் பணால் டெபாசிட் கண்டிப்பா கிடைக்கும்


M S RAGHUNATHAN
ஏப் 16, 2024 14:41

அது சரி ராகுல் வயனாட்டில் உங்கள் கூட்டங்களில், உங்கள் பிரச்சாரங்களில் காங்கிரஸ் கொடி எடுத்து வரக் கூடாது என்று உங்கள் கூட்டணி கட்சியான முஸ்லிம் லீகு ஆணை இட்டுள்ளதாமே? இந்த விஷயத்தை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் உறுதி செய்து இருக்கிறார் கட்சியின் தலைவர் ஆக இருந்த உங்களுக்கு வெட்கம், சூடு, சொரணை இல்லை என்று தெரிகிறது தாங்கள் இஸ்லாமியர்களுக்கு விலை போய்விட்டீர்கள் என்றும் தெரிகிறது எதை கொடுத்தும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி தெரிகிறது


R.MURALIKRISHNAN
ஏப் 16, 2024 14:34

உண்மையில் காங்கிரசை காங்கிரஸ்காரனும், திமுகவை திமுக காரனும் இப்ப நம்புவதில்லை என்பதே உண்மை


Sivaraman
ஏப் 16, 2024 14:11

பாட்டி செய்ததை விடவா ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை