உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் - பிரியங்கா இடையே பிரச்னை: பாஜ., தகவல்

ராகுல் - பிரியங்கா இடையே பிரச்னை: பாஜ., தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ உடல்நலக்குறைவால் ராகுலின் பாத யாத்திரையில் கலந்து கொள்ள முடியவில்லை '' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார். ஆனால், அவருக்கும், அவரது சகோதரர் ராகுலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை தான் காரணம் என பா.ஜ., கூறியுள்ளது. காங்கிரஸ் எம்.பி., ராகுல் மணிப்பூரில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பை வரை பாரத ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு உள்ளார். இந்த யாத்திரை நேற்று உ.பி., மாநிலத்திற்குள் நுழைந்தது. இதனை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வரவேற்பதாக இருந்தது. ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை.இது தொடர்பாக பிரியங்கா வெளியிட்ட அறிக்கையில், உ.பி.,யில் பாத யாத்திரையில் பங்கேற்க ஆவலாக இருந்தேன். ஆனால், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் முடியவில்லை. உடல்நலன் தேறியதும் உடனடியாக யாத்திரையில் கலந்து கொள்வேன். இந்த யாத்திரைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக்கூறியிருந்தார்.இந்நிலையில், பா.ஜ.,வின் அமித் மாளவியா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அனைவரும் தங்களது உடல்நலனை கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த யாத்திரை துவங்கிய போதும் மணிப்பூரில் பிரியங்காவைக் காணவில்லை. யாத்திரை உ.பி., வந்தடைந்த போதும் அவரை பார்க்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் உரிமைக்காக, ராகுல் பிரியங்கா இடையே சரி செய்ய முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளது தற்போது நன்றாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sankaranarayanan
பிப் 17, 2024 22:06

பிரியங்கா ராகுலுடன் கா விட்டுவிட்டார் இனி அது கனியாகாது


MARUTHU PANDIAR
பிப் 17, 2024 19:46

சிலர் என்ன பேசிக்கறாங்க தெரியுமா?இந்த பாத யாத்திரையின் கிழக்கு மேற்கு, தெற்கு வடக்கு ரூட்டு ஒரு சுளுவாய் ஷேப்பில் டிசைன் செய்யப் பட்டதாம்,,அதாவது பாரதத்தை சிலுவை நாடாக பார்க்க வேண்டுமாம், அப்புடீங்கராங்க.


Indian
பிப் 17, 2024 14:52

கட்சிக்குள் கலகமூட்டுவது பத்தாது என்று குடும்பத்தில் கலகமூட்ட ஆரம்பிச்சிட்டீங்களா


duruvasar
பிப் 17, 2024 14:50

ஒன்னு நல்ல தெரியாது. இப்ப மொத்த காங்கிரஸ் கட்சியும் ராகுலை வைத்து காமெடி செய்யறாங்க என்பது. பாவம் இந்த பூணல் அணிந்த தத்ராய கோத்திர பிராமணன்.


ராமகிருஷ்ணன்
பிப் 17, 2024 14:35

செய்திகளை திரித்து நக்கலாக எழுதுவது, சொல்வது தான் திராவிஷ விடியல் மாடல்.


Duruvesan
பிப் 17, 2024 14:32

பாஸ் அமெதி ல ராவுள் தோக்க காரணமே நம்ம அக்கா பொறுப்பாளர் ah இருந்தது தான்


hariharan
பிப் 17, 2024 14:31

நல்ல வேளை பிரியங்கா கலந்துகொள்ளவில்லை. இல்லையென்றால் அவையடக்கம் தெரியாமல் மாரிமாரி முத்தம் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்துவார்.


ராஜா
பிப் 17, 2024 14:00

ராகுலுக்கு தான் வேறு யாரோடு பிரச்சனை இல்லை? மே. வங்க விசயத்தில் வாயை திறக்க வைக்க பார்க்குது பாஜக. திறக்கவே மாட்டார்கள்.


Seshan Thirumaliruncholai
பிப் 17, 2024 13:57

பிரியங்கா ஒரு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். பாத யாத்திரையில் பங்கு கொள்ளாததால் அவர் இணைந்துள்ள கட்சியின் உள் விவகாரம். கட்சிதான் நடவடிக்கை எடுக்கும்


naranam
பிப் 17, 2024 12:33

இதை வைத்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவே முடியும். மாறாக, பாஜக அரசு ‌மக்களுக்குச் செய்த நன்மைகளையும் எதிர் கட்சிகள் மக்களுக்கும் தேசத்துக்கும் இழைத்த தீமைகளையும் பிரச்சாரம் செய்து வாக்குகளைச் சேகரிக்க வேண்டும்.


ராஜா
பிப் 17, 2024 13:58

ஜெகன், சர்மிலாவை வைத்து ராகுல் செய்யவில்லையா? ஒரு அளவுக்கு மேல் போக மாட்டார்கள் பாஜக. கவலை வேண்டாம்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ