உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் உடன் வினேஷ், பஜ்ரங் சந்திப்பு: ஹரியானா சட்டசபை தேர்தலில் களம் காண வாய்ப்பு

ராகுல் உடன் வினேஷ், பஜ்ரங் சந்திப்பு: ஹரியானா சட்டசபை தேர்தலில் களம் காண வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் சந்தித்தனர். இருவரும் காங்கிரஸ் சார்பில் ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது.ஹரியானா சட்டசபையில் 90 இடங்களுக்கு அக்.,5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ., காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதேபோல, சவுதாலா குடும்பத்தினர் பிரிந்து உருவான கட்சியினரும் தேர்தலில் தங்கள் செல்வாக்கை காட்ட களம் இறங்கியுள்ளனர்.

மல்யுத்த வீராங்கனைகள்

ஹரியானாவில் பா.ஜ., ஆட்சியை எப்படியாவது அகற்ற வேண்டும் என ராகுல் முடிவு செய்துள்ளார். இதற்கென, அரசுக்கு எதிரான அனைவரையும் ஒன்று திரட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பா.ஜ.,வுக்கு எதிராக டில்லி வீதிகளில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை களம் இறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்திப்பு

இந்நிலையில், இன்று (செப்.,04) டில்லியில் ராகுலை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் சந்தித்தனர். இதனால் இருவரும் காங்கிரஸ் சார்பில் ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என விவரம் அறிந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.போட்டியிடாவிட்டாலும், காங்கிரஸ் சார்பில் பிரசாரம் செய்வதற்கு இருவரும் களம் இறக்கி விடப்படுவர் என்று அடித்துச் சொல்கின்றனர், காங்கிரஸ் நிர்வாகிகள். அதை உறுதி செய்யும் வகையில் தான் இருவரும் இன்று ராகுலை சந்தித்துப் பேசியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

nagendhiran
செப் 05, 2024 05:54

அப்ப அந்த பெண் சொன்ன கட்சிகளில் சேர அழுத்தம் வருவதாக சொன்னது காங்கிரஸைதானா?


Jai Sankar Natarajan
செப் 04, 2024 21:29

தரித்திரம் தரித்திரத்தோட போய் சேர்க்கிறது இனி கெட்டகாலம் ஹரியானாவிற்கு.


sridhar
செப் 04, 2024 20:48

இந்தம்மாவுக்கு பிளாஸ்டிக் மெடல் கூட கிடையாது.


Kasimani Baskaran
செப் 04, 2024 17:28

இடித்துக்கொண்டு நிற்பதை பார்த்தால் இராகுலுக்கு மிக நெருங்கியவர் என்பது தெளிவாகிறது. பின்னாளில் இராகுல் மீது பாலியல் புகார் சொல்ல வாய்ப்பிருப்பதை மறுப்பதற்கில்லை.


நிக்கோல்தாம்சன்
செப் 04, 2024 16:56

அப்போ தெரிந்தே தவறு செய்தாளா வினேஷ் போகத் , நாட்டிற்கு பதக்கம் கிடைத்தால் மோடிக்கு பெயர் வந்து விடும் என்று தப்பாட்டம் ஆடினாளா அந்த பெண்?


abdulrahim
செப் 04, 2024 16:31

சங்கிகளுக்கு ஏன் வயிறு எரிகிறதாம் ????


Vasu
செப் 04, 2024 18:12

அமைதி படை வீரர் வந்துட்டார் தூக்கி நிறுத்த


Yuvaraj Velumani
செப் 04, 2024 20:23

திருட்டு கும்பல் மத இந்து எதிரி நீங்கள் அழிந்து போக வாய்ப்பு உள்ளது


ganesh
செப் 04, 2024 16:18

மதிப்பை இழந்து விட்டார்கள்


kulandai kannan
செப் 04, 2024 15:57

இந்த வினெஷுக்கு கர்மா முன்னதாக வேலை காட்டி பதக்க வாய்ப்பு நழுவியது.


நசி
செப் 04, 2024 15:17

சுயநல கூட்டம் ..ஆடும் ஆட்டம் முடிவுறும்


இளந்திரையன் வேலந்தாவளம்
செப் 04, 2024 14:59

சாயம் வெளுத்திடுச்சி


சமீபத்திய செய்தி