உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மணிப்பூர் கவர்னரை சந்தித்தார் ராகுல்

மணிப்பூர் கவர்னரை சந்தித்தார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இம்பால்: மணிப்பூர் கவர்னரை சந்தித்தார் காங்., எம்.பி. ராகுல். மணிப்பூரில் கடந்தாண்டு மே 3-ம் தேதி மெய்தி- கூகி பழங்குடியினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. பலர் பலியாயினர். இங்கு ஓராண்டிற்கும் மேலாக வன்முறை நிலவி வருகிறது. இந்நிலையில் பாராளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்.எம்.பி.யுமான ராகுல் இன்று இம்மாநிலத்திற்கு ராகுல் சென்றார். தலைநகர் இம்பாலில் உள்ள ஜிரிபாம் நிவாரண முகாமிற்கு சென்று, மக்களை ராகுல் சந்தித்தார். இந்நிலையில் அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினார். பின்னர் கவர்னர் அனுஷ்யா உய்கியை சந்தித்து பேசினார்.பின்னர் ராகுல் கூறியது, கவர்னரை சந்தித்து பேசினேன். உங்களுக்கு தேவையான உதவி செய்யவே இங்கு நான் வந்துள்ளளேன். இங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கான முயற்சி செய்வேன். இந்த விவகாரத்தினை யாரும் அரசிலாக்க வேண்டாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

GMM
ஜூலை 09, 2024 08:52

தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அரசியல் வழி தெரியாமல், அடங்கி விட்டன. திமுக எதனையும் வளர விடவில்லை. காங்கிரஸ் ராகுல் எதிர் கட்சி தலைவர் ஆனபின், கூட்டணி சார்பாக எதனையும் பேசமாட்டார், யாரையும் இணைக்க மாட்டார். எல்லாம் தனித்து பேட்டி. 25 மேற்பட்ட கட்சிகள் எங்கு உள்ளன? காங்கிரஸ் கூட்டணி அதிக கட்சிகளை அழித்து விடும் அல்லது தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளும். தமிழகத்தில் திமுக, தேசிய அளவில் காங்கிரஸ் ஆதிக்கம். தினமும் தன்னை பற்றி செய்தி வர விரும்பி, நடிக்க துவங்கி விட்டார். பிஜேபிக்கு நல்லது.


saravanan kumar
ஜூலை 09, 2024 08:35

மணிப்பூரை விட தமிழகம் ரொம்ப பாதிக்கபட்டுள்ளது இங்க வந்து பாருங்க


Yes
ஜூலை 09, 2024 06:28

அடேய் எதுக்கு பெரிய ஆட்களை அடிக்கடி போய் பாக்கறே.மக்களை பார் வீணாக பந்தா காட்டாதே.


Kasimani Baskaran
ஜூலை 09, 2024 05:52

எதிர்க்கட்சித்தலைவரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.


தாமரை மலர்கிறது
ஜூலை 08, 2024 20:33

மணிப்பூர் ஏன் இவ்வளவு அமைதியா உள்ளது? அதில் ஏதாவது வன்முறையை தூண்டிவிட்டு, குளிர்காய முடுயுமா என்பதற்காக தான் ராகுல் சென்றுள்ளார். உள்ளே விடாதீங்க. இந்த விஷக்கிருமியின் எம்பி பதவியை பறித்து ஜெயிலில் போடுவது நாட்டிற்கு நல்லது.


காஷ்மீர் கவுல் பிராமணன்.
ஜூலை 08, 2024 20:20

மணிப்பூரில் அமைதி திரும்ப கூடாது.அதனால் கிறிஸ்துவர்ளை சந்தித்து கலவரத்தை தூண்டிவிட கிறிஸ்துவன் செல்கிறான். இரோம் ஷர்மிளா எதற்காக பல ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்ததால் என்பது இவனுக்கு தெரியுமா? ஆனால் தமிழகத்தில் விஷசாராயத்தினால் இறந்த அனைவரும் ஹிந்துக்கள். அதனால் அவர்களை சந்திக்கவோ ஆறுதல் கூறவோஇங்கு வரமாட்டான்.


K Subramanian
ஜூலை 08, 2024 20:10

The very purpose of his visit is to provoke those people and blame the Central Govt and thereby bringing bad reputation to Modiji. Why does not he come to Tamil Nadu where innumerable deaths have taken place because of illicit liquor and people are being murdered on roads day in and day out. He will not come to TN for obvious reasons.


sankaranarayanan
ஜூலை 08, 2024 20:10

அட அட அட என்ன கரிசனம் என்ன கரிசனம் இவருக்கு இவர் மணிப்பூர் கவர்னரை சந்தித்ததுமே அங்கே அமைதி பூங்காவாகிவிட்டது இவர் யாரையும் தூண்டிவிடவில்லை இவர் உடனே இஸ்ரேல் சென்றால் அங்கே நடக்கும் போரே நின்றுவிடும் சற்று தமிழகம் வந்தாரானால் இனி கள்ள சாராயம் இருக்காது கூலிப்படைகள் காணாமல் போகும்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 08, 2024 20:08

மணிப்பூரில் உள்ள பிரச்னை வெறும் சட்டம் ஒழுங்குக்கு உட்பட்டதல்ல ..... அதை இவருக்கு யாராவது புரிய வைக்கணும் ...


nagendhiran
ஜூலை 08, 2024 19:54

கள்ளசாரய இறப்புக்கு சென்றாரா பப்பு? வழக்கமான பிண அரசியல் நாயகன் பப்பு?


மேலும் செய்திகள்







புதிய வீடியோ