உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டில் ஆரஞ்சு ஜாம் தயாரித்த ராகுல், சோனியா: வீடியோ வைரல்

வீட்டில் ஆரஞ்சு ஜாம் தயாரித்த ராகுல், சோனியா: வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுலும் அவரது தாயார் சோனியாவும் இணைந்து தங்கள் வீட்டில் ஆரஞ்சு ஜாம் தயாரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0nlqcl15&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வீடியோவில், ராகுலும், சோனியாவும் அவர்களது தோட்டத்துக்குச் சென்று சிறிய ஆரஞ்சுப் பழங்களை பறித்து கூடையில் நிரப்பினர். கூடை நிறைய பழத்தை எடுத்துக்கொண்டு இருவரும் சமையலறைக்கு வருகின்றனர். இருவரும் ஆரஞ்சுப் பழத்தை உரித்து சாறு எடுத்தனர்.

பிரியங்கா யோசனை

பின்னர், ‛‛ இது தங்கை பிரியங்காவின் யோசனை. அவர் சொன்ன சமையல் முறையை பின் பற்றி இந்த ஜாமை நான் தயாரிக்கிறேன்” என்று குறிப்பிடும் ராகுல், அடுப்பில் பாத்திரம் வைத்து சமைக்க ஆரம்பித்தார்.அப்போது ராகுல், ‛‛ பா.ஜ.,வினருக்கும் ஜாம் கிடைக்கும்” என்று சொல்ல, அதற்கு சோனியா “அவர்கள் இதை நம் மீது எறிந்துவிடுவார்கள்” என்கிறார்.அதற்கு ராகுல், “அதனால் என்ன, மீண்டும் பழங்களை பறிப்போம்” என்று சொல்லிவிட்டு, இருவரும் சேர்ந்து சிரிக்கின்றனர்.

பிடிக்காத விஷயம்

“ராகுலிடம் எனக்கு பிடிக்காத விஷயம், என்னைப் போலவே அவனும் பிடிவாத குணம் கொண்டவன். ஆனால், அன்பும் அக்கறையும் மிகுந்தவன்” என தன் மகனைப் பற்றி சோனியா புகழ்ந்து பேசுகிறார்.ஆரஞ்சு ஜாம் தயாரான பிறகு தாயும் மகனும் சேர்ந்து கண்ணாடிக் குடுவைகளில் அதை நிரப்புகின்றனர். அந்தக் குடுவைகளின் மேல், “சோனியா மற்றும் ராகுலிடமிருந்து அன்புடன்...” என்று எழுதப்பட்டுள்ளது.Galleryராகுலின் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

DARMHAR/ D.M.Reddy
ஜன 06, 2024 02:25

அடுத்தபடி இவர்கள் செய்யும் பட்டியலில் இடம் பெறுவன, புளியங்காய் வெங்காய பச்சடி யா அல்லது மாங்காய் கொத்தவரங்காய் அவரைக்காய், சேனைக்கிழ் ங்கு, பட்டாணி, வெள்ளரிக்காய், துருவனை தேங்காயுடன் மஞ்சள் தூள் சேர்த்து செய்யும் அவியலா என்பது கடவுளுக்கவே வெளிச்சம்


Naga Subramanian
ஜன 02, 2024 06:12

எல்லாம் கிடைக்க கிழவியை தூக்கி மனையில் வைத்த கதையாக உள்ளது, இவர்களின் ஜாம் தயாரிப்பு. காங்கிரெஸ்சே பார்ட் பார்ட்டா ஜாம் ஆகி கிடக்கு. இந்த லட்சணத்துல இன்னொன்னு எதற்கு? தன்னை சுற்றியுள்ளவர்களை பற்றியோ அல்லது கீழ்த்தட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியோ அறிந்து கொள்ள முடியாதவர்கள், இன்று ஜாம் நாளை ஊறுகாய் என்று தயாரித்து, அதற்கு காங்கிரஸ் என்ற பிராண்டில் விற்பனை செய்தாவது முயற்சிக்கலாம்.


Gowtham Saminathan
ஜன 02, 2024 01:31

இதான் நல்லா வருதே... இதுக்குத் தான் லாயக்கு... வராத அரசியல் எதுக்கு


Mohan das GANDHI
ஜன 01, 2024 23:55

VERY IMPORTANT FOR THE COUNTRY THIS NEWS BY THESE ITALIANS CLOWN? WASTING TIMES BY THESE ITALIANS ROMABURI ILLEGAL MULTI MILLIONERS STORY. INDIAN PEOPLE HATE CONGRESS HIGHLY CORRUPTED PARTY. THIS ELECTION WILL BE END OF THIS CONGRESS CHAPTER IN INDIA. ONLY BJP HON'PM MODIJI FOREVER PM OF INDIA.


vijay
ஜன 01, 2024 23:48

ஆரஞ்சு பறிப்பதற்கு கூட கத்தி ஐ பயன் படுத்த வேண்டுமா ? இவர்களுக்கு இந்த வேலை தான் சரியானதாக இருக்கும் .


Suresh Pandian
ஜன 01, 2024 23:10

குச்சி மிட்டாய் குருவி ரொட்டி செய்து பழகுடா தம்பி


RAMESH
ஜன 01, 2024 19:52

அம்மாவும் பிள்ளையும் குக் வித் கோமாலிஸ் அடுத்த சீசன்ல கலந்துக்க போறாங்க , வாழ்த்துக்கள்


HoneyBee
ஜன 01, 2024 19:49

கைவசம் ஒரு தொழில் இருக்கு.. சரி சரி .. நடையை கட்டுங்க


g.s,rajan
ஜன 01, 2024 19:12

இன்னும் ஐஞ்சு வருடத்திற்கு வீட்டில் இருந்து தயாரிச்சுக்கிட்டே இருந்தால் அம்மாவும் மகனும் மிகப் பெரிய எக்ஸ்பர்ட் ஆயிடுவாங்க ...


g.s,rajan
ஜன 01, 2024 19:09

சீச்சீ ...இந்த ஜாம் புளிக்கும் ....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை