உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொய் சொல்கிறார் ராகுல்; புகாருக்கு பாஜ பதிலடி

பொய் சொல்கிறார் ராகுல்; புகாருக்கு பாஜ பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராகுல் கூறும் குற்றச் சாட்டுகள் உண்மை கிடையாது, தவறானது என பாஜ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல், 'வெளிநாட்டு தலைவர்களை எதிர்க்கட்சி தலைவரும் சந்தித்து பேசும் மரபை மத்திய அரசு கைவிட்டு விட்டது.போதிய பாதுகாப்பின்மையால் இதுபோன்று செய்கிறார்கள்' என குற்றம் சாட்டி இருந்தார். இது குறித்து, பாஜ எம்பியும், பாஜ செய்தி தொடர்பாளருமான சம்பித் பத்ரா கூறியதாவது: எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராகுல் கூறும் குற்றச் சாட்டுகள் உண்மை கிடையாது. மத்திய அரசு பாதுகாப்பற்றதாக உணருவதால், வெளிநாட்டு தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவரை சந்திக்க அனுமதிக்கப் படுவதில்லை என்று ராகுல் கூறினார். ராகுலால் அரசு ஏன் பாதுகாப்பற்றதாக இருக்க வேண்டும்? எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் இன்று தெரிவித்த கருத்துக்கள் பொருத்தமற்றவை. இன்று, இந்தியா உலகப் பொருளாதாரத்தில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. அவர் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம், அந்த நாடுகளின் தலைவர்களை அவரைச் சந்திக்க வேண்டாம் என்று அரசு கேட்டுக்கொள்வதாக கூறுவது பொறுப்பற்றது. இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி