உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் உரிமை யாத்திரை பீஹாரில் தொடங்கினார் ராகுல்!

வாக்காளர் உரிமை யாத்திரை பீஹாரில் தொடங்கினார் ராகுல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில்,'வாக்காளர் உரிமை யாத்திரை தொடங்கிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், 'இது அரசியல் சட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டம்,' என்றார்.முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பீஹாரில், வரும் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, அங்கு வாக்காளர் பட்டியலில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்தன. இதன்படி, 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bd5wqrut&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பீஹாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இன்று யாத்திரையை துவங்கினார். இதில் பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.யாத்திரை துவக்க நிகழ்ச்சியில் பேசிய ராகுல், ''ஒட்டு மொத்த நாட்டிலும், சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் திருடப்படுகின்றன. புகார் கூறியவுடன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், அதேபோன்று கூறிய பாஜ தலைவர்களிடம் அவ்வாறு கூறவில்லை. இது அரசியல் சட்டத்தை பாதுகாப்பதற்கான போராட்டம்; ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., அரசியல் சட்டத்தை அழிப்பதற்கு முயற்சிக்கின்றனர்,'' என்றார்.பீஹாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சாசாராம் பகுதியில் இன்று துவங்கிய யாத்திரை, அடுத்த 15 நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். செப்., 1ல், தலைநகர் பாட்னாவில் யாத்திரை முடிவடைய உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

vbs manian
ஆக 18, 2025 09:27

அலஹாபாத் கோர்ட் தீர்ப்புக்கு பின் வந்த emergency போல் இருக்கிறது. மோடியை வீழ்த்த முடியவில்லை. சூழ்ச்சியால் முயற்சி.


பேசும் தமிழன்
ஆக 17, 2025 21:36

கைப்புள்ள அரிவாளோடு கிளம்பி விட்டார் ....எத்தனை தலை உருளப்போகிறதோ ???


பேயும் தமிழன்
ஆக 17, 2025 21:11

எல்லா ஊழல் பேர்வழிகளும் ஒரே மேடையில் ....ஆமாம் லாலு தண்டனை பெற்ற குற்றவாளி தானே .....தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றால் அவருக்கு உடல் சுகமில்லாமல் போய் விடும்....ஆனால் ஜாமீன் வாங்கி கொண்டு..... பிரசாரம் செய்யும் போது உடல்நிலை நன்றாக இருக்கும்....என்ன உங்க நடிப்பு ...ஜாமீனை ரத்து செய்து....குற்றவாளியை உள்ளே தள்ளுங்கள் .


Kasimani Baskaran
ஆக 17, 2025 15:41

கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுப்பது போல சோரோஸின் ஆட்கள் வின்சியுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள். காங்கிரசை மொத்தமாக சோரோஸ் விலைக்கு வாங்கிவிட்டார் போல தெரிகிறது. இனி காங்கிரஸ் வெளங்க வாய்ப்பில்லை.


M Ramachandran
ஆக 17, 2025 14:29

அது இது தானா?


Rajan A
ஆக 17, 2025 13:59

அதைத்தான் உங்க கட்சி ஓரம் கட்டும் போது காட்டி விட்டார்களே. எவ்வளவு சொன்னாலும் புரியாத தத்தி


M S RAGHUNATHAN
ஆக 17, 2025 13:21

துணிவு இருந்தால் தனித்து நிற்கட்டும் பார்க்கலாம்.


M S RAGHUNATHAN
ஆக 17, 2025 13:18

ஐயோ கைப்பிள்ளை கிளம்பி விட்டது. இன்று எத்தனை தலை உருளப் போகிறதோ தெரியவில்லை.


Nagarajan D
ஆக 17, 2025 12:23

இவர ஏன் நீதிமன்றங்கள் தண்டிப்பதில்லை... ஒரு வேளை நீதிமன்றங்கள் வர்மா பணக்கட்டுடன் பிடிபட்டவனை சார்ந்தவர்கள் என்பதாலா


பா மாதவன்
ஆக 17, 2025 12:00

வெளிநாட்டுக் காரங்கிட்ட வாங்கின காசுக்கு மேல கூவூராங்களே ... அவ்வளவு விசுவாசம்.. நம்ப நாட்டு மேல் கொஞ்சம் விசுவாசம் இருந்திருந்தால் ஜனங்கள் கொஞ்சமாவது ஆதரவு தந்திருப்பார்கள்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை