உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலின் 2வது யாத்திரை:‛‛பாரத் ஜோடோ நீதி யாத்திரை என பெயர் மாற்றம்

ராகுலின் 2வது யாத்திரை:‛‛பாரத் ஜோடோ நீதி யாத்திரை என பெயர் மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜன.,,14 முதல் மார்ச் 20 வரை மணிப்பூரில் இருந்து மும்பை வரை காங்., எம்.பி., ராகுல் துவக்க உள்ள அடுத்த கட்ட யாத்திரைக்கு பாரத் ஜோடோ நீதி யாத்திரை என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.2024 லோக்சபா தேர்தல் தொடர்பான பணிகளும் நடந்து வருகின்றன. ஜன.,14ல் பேருந்து மூலம் ராகுல், மணிப்பூர் முதல் மும்பை வரை 6,200 கி.மீ தூரத்தை உள்ளடக்கி பாரத் நியாய யாத்திரை என்ற பெயரில் துவங்குகிறார். இந்த யாத்திரைக்கு பாரத் ஜோடோ நீதி யாத்திரை' என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த யாத்திரை மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்குவங்கம், பீஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உ.பி., ம.பி., ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய 14 மாநிலங்கள் வழியாக 66 நாட்கள் (மார்ச் 20 வரை) பேருந்தில் ராகுல் பயணித்து , குஜராத்தின் போர்பந்தரில் யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

J.Isaac
ஜன 05, 2024 18:27

இப்படி வசை பாடி ,வசை பாடி கூப்பாடு போட்டாலும் கதை ஆகாது


mrsethuraman
ஜன 05, 2024 14:11

சென்ற யாத்திரையில் தோசை சுட்டார் .தற்போது பரோட்டா சுட வாய்ப்புண்டு


M Ramachandran
ஜன 05, 2024 13:51

ராகுலு இந்த யாத்திரை பெயரய் புருடா அல்லது ரீல் உடும் யாத்திரை என்று மாத்தி இருக்கலாம்


செந்தமிழ் கார்த்திக்
ஜன 05, 2024 10:18

அண்ணாமலை நடத்தும் பேருந்து பயணத்தை விட, ராகுல் அண்ணன் நடத்திய, நடத்தும் யாத்திரை எவ்வளவோ மேல். தொடர்ந்து உங்கள் வேலையை செய்யுங்கள் ராகுல் அண்ணா, வாழ்த்துக்கள்.


jaya
ஜன 05, 2024 11:38

6200 கி மி 66 நாளில் கடக்க போகிறார் . ஒரு நாளைக்கு 94 கி மி , ஆஹா நடந்திடுவாரே இது . வெறும் பஸ் யாத்திரை தான் இது.


சங்கையா,முதுகுளத்தூர்
ஜன 05, 2024 14:30

ஏலே கார்த்தி நீ வழக்கமா திமுகவுக்குதான முட்டுக் கொடுப்ப இப்ப என்ன திடீர்னு காங்கிரஸ் கட்சிக்கு சொம்பு தூக்கிட்டு இருக்க?????


வாய்மையே வெல்லும்
ஜன 05, 2024 07:38

ராவுளு அரசியலுக்கு பதில் பஸ் ட்ராவல்ஸ் வைத்து நடத்தி இருந்தால் இந்நேரம் அவர் தான் "ராவுத்தானி" ....அட யாருங்க ராவுத்தானி என்கிறவர்களுக்கு ...... ராவுளின் அரசியல் மறைமுக போட்டியாளர் பிசினஸ் கிங் அதானி அம்பானி ...


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 05, 2024 07:30

ஜோடோ என்றால் ஒன்று படுத்துவது, அழகு படுத்துவது என்று பொருள்படும். தமிழில் ஜோடி, ஜோடனை, ஜோடித்து என்ற வார்த்தைகள் பயன்படுத்துகிறோம். சோடோ என்றால் விட்டு விலகு, வெளியில் செல் என்று பொருள்படும். பாரத் ஜோடோ என்றால் இந்தியாவை ஒற்றுமைப்படுத்து என்றும், பாரத் சோடோ என்றால் இந்தியாவை விட்டு வெளியேறு என்றும் பொருள்படும்.


Venkatesh
ஜன 05, 2024 01:41

ஒருவன் முட்டாள் , உதவாக்கரை என்று தெரிந்தும் சில மனிதர்கள் அந்த மதிகெட்ட மனிதனை ஆதரிக்கிறார்கள் என்றால் ஆதரிப்பவர்கள் மனநிலையை புரிந்துகொள்ள முடிகிறது.


Chakkaravarthi Sk
ஜன 05, 2024 01:16

பப்பு வாழ்க பப்பு வெளிநாட்டிற்கு செல்லாமல் இந்தியாவிலேயே சுற்றுவதற்கு என்ன காரணமோ யமரியேன் பராபரமே ஒரு வேளை மொத்த நாட்டையும் என் காலால் அளந்து வெளிநாட்டுக்கு விற்று விடலாம் என்ற என்னமோ என்னவோ என்ன .....


Ramesh Sargam
ஜன 05, 2024 00:37

Old Wine In A New Bottle என்பது போல, யாத்திரை ஒன்றே. பெயர் மட்டும் 'மாற்றம்'. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு, குறிப்பாக ராகுலுக்கு கிடைக்கபோவது 'ஏமாற்றம்' வருந்துகிறேன்...


பேசும் தமிழன்
ஜன 05, 2024 00:10

பப்பு உன் பருப்பு இனியும் வேகாது..... காந்தி என்று போலி பெயரை வைத்து கொண்டு நாட்டு மக்களை இனியும் ஏமாற்ற முடியாது!!!


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை