உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிவினைவாத ஆதரவு பத்திரிகை ஆபீசில் ரெய்டு; துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

பிரிவினைவாத ஆதரவு பத்திரிகை ஆபீசில் ரெய்டு; துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் போலீஸ் புலனாய்வு படையினர், காஷ்மீர் டைம்ஸ் செய்தித்தாளின் ஜம்மு அலுவலகத்தை சோதனை செய்து, ஏகே ரக ரைபிள் தோட்டாக்கள், கைத்துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.ஜம்முவில் உள்ள காஷ்மீர் டைம்ஸ் செய்தித்தாளின் அலுவலகத்தில் சந்தேகத்தின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீர் போலீசாரின் மாநில புலனாய்வு அமைப்பு திடீரென சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில், ஏகே ரக ரைபிள் தோட்டாக்கள், கைத்துப்பாக்கிகளில் பயன்படும் குண்டுகள் மற்றும் கையெறி குண்டுளுக்கான லிவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3avxmf34&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கணினிகள் உட்பட வளாகத்தை சிறப்பு புலனாய்வு குழுக்கள் முழுமையாக சோதனை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 1954ம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் வேத் பாசினால் நிறுவப்பட்ட காஷ்மீர் டைம்ஸ், நீண்ட காலமாக பிரிவினைவாத ஆதரவு பத்திரிகையாக கருதப்படுகிறது. ஜம்மு பிரஸ் கிளப்பின் தலைவராகவும் பணியாற்றிய வேத் பாசின் சமீபத்திய ஆண்டுகளில் காலமானார். அதன் பிறகு அவரது மகள் அனுராதா பாசின் ஜம்வால், அவரது கணவர் பிரபோத் ஜாம்வாலுடன் சேர்ந்து நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர்.அனுராதா பாசின் மற்றும் பிரபோத் ஜம்வால் தற்போது வெளிநாட்டில் உள்ளனர். இந்த செய்தித்தாள் 2021-22ம் ஆண்டு முதல் ஜம்முவிலிருந்து அதன் அச்சுப் பதிப்பை வெளியிடவில்லை. இருப்பினும் அதன் ஆன்லைன் பதிப்பு செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.போலீசாரின் இந்த சோதனைக்கு பிரிவினைவாத ஆதரவு தலைவரான மெஹ்பூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

theruvasagan
நவ 20, 2025 22:12

எங்க ஊர்ல கூட அந்த மாதிரி ஒரு ரெய்டு விடுங்க. பிரிவினைவாதம் தேசவிரோதம் எண்ணம் கொண்ட சக்திகளுக்கு இங்கு சாதகமான சூழல் நிலவுகிறது. களையெடுக்க வேண்டியது அவசியம்.


கரீம் பாய், ஆம்பூர்
நவ 20, 2025 21:41

பிரிவினை என்ற பெயரே எந்த அகராதியிலும் இருக்க கூடாது.


Santhakumar Srinivasalu
நவ 20, 2025 20:57

அந்த அக்கா வீட்டையும் ரவுண்டு கட்டுங்க!


R. SUKUMAR CHEZHIAN
நவ 20, 2025 20:19

மெகபூபா முப்தியை ராஜஸ்தான் பாலைவனத்தில் சிறை வைக்க வேண்டும்.


Kulandai kannan
நவ 20, 2025 19:46

இங்கும் உள்ளன,


சமீபத்திய செய்தி