உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ராணுவ வீரர் பெயர்களை ரயில் இன்ஜினுக்கு சூட்டி கவுரவிக்கும் ரயில்வே

 ராணுவ வீரர் பெயர்களை ரயில் இன்ஜினுக்கு சூட்டி கவுரவிக்கும் ரயில்வே

சென்னை: பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ அதிகாரிகளின் பெயர்களை, ரயில் இன்ஜின்களுக்கு சூட்டி, ரயில்வே கவுரவித்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களில், வீரமரணமடைந்த ராணுவ அதிகாரிகளை கவுரவிக்கும் புதிய திட்டத்தை, 2023ம் ஆண்டு ரயில்வே அறிவித்தது. அதன்படி, வடக்கு ரயில்வேயின் லக்னோ லோகோ பணிமனையில், பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் முடிந்த ரயில் இன்ஜின்களுக்கு, தேசத்துக்காக உயிர் நீத்த ராணுவ அதிகாரிகள், வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. இந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுக ளில் மட்டும், 25க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த ரயில் இன்ஜின்களுக்கு, ராணுவ அதிகாரி பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை