உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பத்தாண்டில் 5 லட்சம் பேருக்கு ரயில்வே வேலை: அமைச்சர் பெருமிதம்

பத்தாண்டில் 5 லட்சம் பேருக்கு ரயில்வே வேலை: அமைச்சர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: கடந்த பத்தாண்டுகளில் (2014-2024) ரயில்வே துறை 5 லட்சம் பணியாளர்களை பணியமர்த்தி உள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.அரசியல் அமைப்பு தினத்தை முன்னிட்டு, நாக்பூரில் உள்ள ஆஜானி ரயில்வே வளாகத்தில், அனைத்து இந்திய எஸ்.சி மற்றும் எஸ்.டி., ரயில்வே பணியாளர்கள் அமைப்பின் தேசிய மாநாடு நடந்தது. இதில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:கடந்த 2004லிருந்து 2014ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்தில் ரயில்வே துறையால் 4.4 லட்சம் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.ஆனால், 2014லிருந்து 2024ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகாலத்தில் 5 லட்சம் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக ஆண்டு வேலைவாய்ப்பு அட்டவணை அறிமுகமாகிறது. தற்போது, 12,000 இணைப்பு பெட்டிகள் தயாரிப்பில் இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

PARTHASARATHI J S
நவ 26, 2024 06:21

சீனியர் சிட்டிசன்கட்கு 50% பயணத்தில் இலவசம் தர ஏன் பாஜக அரசு தயங்குகிறது ?


ஆரூர் ரங்
நவ 26, 2024 11:49

சரக்குப் போக்குவரத்து லாபத்தை தந்து கொண்டிருந்த போது சலுகைகளை அளிக்க முடிந்தது இப்போது தங்க நாற்கரச் சாலை போன்ற திட்டங்களால் கூடுதல் சரக்கு போக்குவரத்து சாலைகளுக்கு மாறிவிட்டது. லாபம் குறையும் போது சலுகைகளைத் தருவது கடினம்.மேலும் இப்போது ஏராளமான செலவில் முதியவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வசதிகள் செய்யப் படுகிறதே.


Ramesh Sargam
நவ 25, 2024 20:45

கடந்த ஓரிரண்டு ஆண்டுகளில் அதிக ரயில் விபத்துக்கள். விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் அமைச்சர் அவர்களே. மேலும் விபத்துக்கள் ஏற்படுவது சதியினாலா, அல்லது ஊழியர் தவறினாலா என்று கண்டறிந்து, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். விபத்துக்கள், அதனால் ஏற்படும் உயிர்பலிகள் தடுக்கப்படவேண்டும்.


Bala
நவ 25, 2024 20:38

பாராட்டுக்கள். ரயில்வே துறை இப்போது நன்கு செயல்படுகிறது