அடுத்த 3 தினங்களுக்கு மழை; வானிலை மையம் தகவல்
பெங்களூரு; 'கர்நாடகாவில் வரும் மூன்று நாட்கள் மழை பெய்யும்' என, மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.அதன் விபரம் வருமாறு:இன்று சனிக்கிழமை முதல் அடுத்த மூன்று தினங்கள் வடக்கு கர்நாடகாவின் உட்பகுதி மற்றும் தெற்கு கர்நாடகாவின் உட்பகுதி மாவட்டங்களில் சாதாரண மழை பெய்யும். ஷிவமொக்கா, ராம்நகர், மைசூரு, மண்டியா, குடகு, சிக்கமகளூரு மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நேற்று விஜயநகரா மாவட்டம், ஹரபனஹள்ளியில் 5 செ.மீ., ஹாவேரியில் 4 செ.மீ., தார்வாட், சிக்கமகளூரு, துமகூரு, ஷிவமொக்காவில், 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.கடந்த இரு தினங்களாக பெய்த மழையின் காரணமாக, பெங்களூரு நகரம் பாதிக்கப்பட்டது. சாலைகளில் நீர் தேங்கி, வாகன போக்குவரத்து பாதித்தது. மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். நகரில் பட்டாசு விற்பனை பாதிப்படைந்தது. நேற்று 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.'பெங்களூரு நகரில் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை தொடரும்' என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.