உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தானில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வேகமாக வந்த இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மாவட்டத்தில் உள்ள சிக்வால் பகுதிக்கு அருகே, தேசிய நெடுஞ்சாலையில், வேகமாக வந்த இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பிரபலமான புனித யாத்திரைத் தலமான கதுஷ்யம் கோவிலுக்கு சென்று விட்டு, இரண்டு கார்களில், வீடு திரும்பி கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்தது என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.இந்த விபத்து நேற்றிரவு 11 மணிக்கு நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மனோஜ் ஜாகர், கரண், சுரேந்திர குமார், தினேஷ் மற்றும் மதன் சரண் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்துள்ளது. துாக்க கலக்கத்தில் வாகனம் ஓட்டும்போது சற்று கண் அசந்தாலும் பெரும் விபத்து நேரிட்டு விடும். எனவே, இரவு, அதிகாலை நேரங்களில் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜூலை 22, 2025 13:14

கதி சக்திக்கு வந்த வாழ்வு


Padmasridharan
ஜூலை 22, 2025 11:41

காசு வாங்கி சரியா ஓட்டத் தெரியாதவங்களுக்கு லைசென்ஸ் கொடுத்தாலும் இப்படி விபத்துகள் நேரிடும் சாமி. இடது பக்கத்துல போறவங்க வலது light indicator அ போடறாங்க. சந்துல நடந்து போயி திரும்பறவங்கள ஓவர் டேக் பண்ணி வண்டியில horn அடிச்சிகிட்டே திரும்பறாங்க. வண்டியில இருக்கிறவங்க ராஜா மாதிரி அவங்க இஷ்டத்துக்கு ரோட்ட பயன்படுத்தறாங்க.


புதிய வீடியோ