உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 18-ல் ஒய்வு பெறும் ராஜிவ் குமார் : அடுத்த தலைமை தேர்தல் கமிஷனர் யார் ?

18-ல் ஒய்வு பெறும் ராஜிவ் குமார் : அடுத்த தலைமை தேர்தல் கமிஷனர் யார் ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் பணி நிறைவு பெறுவதையடுத்து அடுத்த தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பான வழக்கு வரும் 19-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.ஜார்க்கண்ட் மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜிவ் குமார் கடந்த 2022ம் ஆண்டு இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். வரும் பிப்ரவரி 18ம் தேதி பணி நிறைவு பெறுகிறார்.இந்நிலையில் தலைமை தேர்தல் கமிஷனர், மற்றும் பிற தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக தேர்தல் நியமன கமிஷனர்கள் நியமன சட்ட திருத்த மசோதா 2003ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது.இதன் படி பிரதமர் , எதிர்க்கட்சிதலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு, தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு ஏற்கவில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒரு மத்திய அமைச்சரை சேர்க்க வலியுறுத்தியது. இது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில் தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் வரும் 18-ம் தேதியுடன் பணி நிறைவு பெறுவதால், அடுத்த தலைமை தேர்தல் கமிஷனர் யார் என்பது குறித்து இதுவரை மத்திய அரசு அறிவிக்கவில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் சூரியகாந்த், கோட்டீஸ்வர்சிங் அமர்வு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

V வைகுண்டேஸ்வரன்
பிப் 12, 2025 22:08

அடுத்த தலைமை தேர்தல் கமிஷனர் யாரோ இருந்து விட்டுப் போகட்டும். அடுத்து இந்த ராஜிவ் குமாருக்கு, அவருடைய விசுவாசத்திற்கு ஏற்றபடி, பாஜக, அவருக்கு என்ன போஸ்ட் கொடுக்கப் போகிறார்கள் என்று யோசியுங்கள்.


venugopal s
பிப் 12, 2025 21:35

எந்த பொம்மை நன்றாகத் தலையை ஆட்டுகிறதோ அதற்குத் தானே வாய்ப்பு கிடைக்கும்!


T.sthivinayagam
பிப் 12, 2025 21:31

புதுசா வரவா நல்லவராக இருக்க வேண்டும்


கல்யாணராமன்
பிப் 12, 2025 21:24

தலைமை தேர்தல் ஆணையர் தேர்வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருக்க வேண்டும் என்றால் தலைமை நீதிபதி தேர்வில் தலைமை தேர்தல் ஆணையர் இருக்கலாம் அல்லவா?


sankaranarayanan
பிப் 12, 2025 21:18

உச்சநீதிமன்ற நிலுவையில் உள்ள பல லட்சம் வழக்குகளை விசாரித்து முடிக்க நேரம் இல்லை.இதில் அரசு நிர்வாகத்திலும் பங்கு வேண்டுமா இது முற்றிலும் தவறு சற்று ஒதுங்கியே இருக்க வேண்டும் நிர்வாகம் வேறு, நீதி வேறு.


தாமரை மலர்கிறது
பிப் 12, 2025 21:01

ராஜிவ் குமார் சிறப்பாக ? செயல்படுவதால், இவருக்கு பதவி நீடிப்பு கொடுக்கப்படும்.


GMM
பிப் 12, 2025 20:43

நிர்வாகத்தில் உச்ச நீதிமன்றம் தலையீடு தவறு. மேலும் தேர்தல் ஆணையர் தேர்வில் நீதிபதி கூடாது. பிரதமர், எதிர் கட்சி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் குழு மட்டும் போதாது . இவர்களுக்கு பணி விதிகள் கிடையாது. பணி மூப்பு பெரும் தேர்தல் ஆணையர், சீனியர் கவர்னர், தணிக்கை துறை தலைவர் அல்லது மத்திய அரசு தலைமை செயலர் இருக்க வேண்டும்.


Mohammad ali
பிப் 12, 2025 20:24

டாஸ்மாக்கோடு திருடர்கள் odhunkikolvaargal


Bye Pass
பிப் 12, 2025 19:40

திராவிட கண்மணிகள் இந்த பதவிக்கு வருவதில்லையே


Smbs
பிப் 12, 2025 19:39

அடுத்த அடிமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை