உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாதி, மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை; பாகிஸ்தானை விளாசிய ராஜ்நாத் சிங்

ஜாதி, மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை; பாகிஸ்தானை விளாசிய ராஜ்நாத் சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நாங்கள் மதத்தின் அடிப்படையில் கொல்லவில்லை, செயல்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்தினோம். ஜாதி, மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பயங்கரவாதிகள் பெயர் மற்றும் மதத்தைக் கேட்டு மக்களைக் கொன்றனர், ஆனால் நமது வீரர்கள் மதத்தின் அடிப்படையில் பயங்கரவாதிகளைக் கொல்லவில்லை. மாறாக நமது வீரர்கள் அவர்களின் செயலுக்காக கொலை செய்தனர். உலகம் முழுவதும் ஒரு குடும்பம் என்ற கருத்தை இந்தியா நம்புகிறது. ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை.

துல்லியமாக...!

ஆப்பரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு நமது படைகள் தகுந்த பதிலடி கொடுத்தன , மேலும் தீர்மானிக்கப்பட்ட சரியான இலக்குகளை துல்லியமாக தாக்கின. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய பல இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ராணுவ நடவடிக்கை

ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அமைதியைப் பாதுகாப்பதற்கும், இழந்த உயிர்களை கவுரவிப்பதற்கும் ஒரு வாக்குறுதி.இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அப்பாவி
ஆக 25, 2025 21:35

அமெரிக்கா மாதிரி இங்கேயும் காச வெச்சுத்தான் பாகுபாடு காட்றாங்க.


venugopal s
ஆக 25, 2025 18:26

ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை என்பது போல் உள்ளது!


V.Mohan
ஆக 25, 2025 17:46

நம்ம நாட்டின் அரசியல்வாதிகள் ஏற்படுத்தும் சிக்கல்களே அதிகம். ஜாதிகளே இல்லை என்று பெருமை பேசும் மக்களுக்கு ஜாதி அடிப்படை கொண்ட இட ஒதுக்கீடு தரும் விடியல் திமுகவை தட்டி கேட்க திராணி இல்லை.. இந்த உச்சநீதிமன்றம் 50சதவிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று பல முறை கூறி உள்ளது. ஆனால் தமிழ் நாட்டில் 69சதவீதம் இட ஒதுக்கீட்டை நடத்துகிறது. இதுல கொடுமை என்னன்னா, பாக்கி உள்ள இட ஒதுக்கீட்டிற்கு O.C. என்று பெயர் கொடுத்து அதிலும் மற்ற ஒதுக்கீட்டுக்காரர்கள் போட்டியிடலாம் என்று வைத்து, முன்னேறிய வகுப்பைஜாதி சார்ந்தவர்களுக்கு நல்ல பெரிய்ய...ஆப்பு வைத்துவிடுகின்றனர். இதை யாராவது சுட்டிக்காட்டினால் போச்சு, விடியல் சம்பள அடிவருடிகள், விடியல் கூட்டணி சொம்புகள், முக்கியமாக கான் கிராஸ் கட்சி, கொம்யூன் கட்சிகள் எல்லாம் மைக், கொடி, கம்பு,தட்டி போஸ்டர் எல்லாம் எடுத்துக் கொண்டு தமிழ்நாடே பற்றி எரியுதுன்னு கிளம்பிருவாங்க. நல்லா தமிழ்நாட்டு ஜனங்களை மூளை சலவை பண்ணி வச்சிருக்காங்க. எப்படி எப்ப தமிழ்நாட்டின் எல்லா தரப்பு மக்களும் முன்னேறப்போவுதோ. ???


SULLAN
செப் 24, 2025 07:47

முதலில் இட ஒதுக்கீடு என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு பேசவும்? என்னது முப்பத்தி ஒரு சதம் சும்மா கொடுக்கணுமா?? உயர் வகுப்பினருக்கு பத்து சதவீதம் இட ஒதுக்கீடு மட்டும் இனிக்குதா?? பல மக்கள் இன்னும் அவுங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவம் இன்னும் கிடைக்க வில்லை அது கிடைக்கும் வரை இட ஒதுக்கீடுகள் தொடரும் .


Rajamani K
ஆக 25, 2025 17:32

நீங்க ...ஏன் உலகமே சொன்னாலும் முஸ்லிம் வே4இயர்களை மாற்றவோ, திருத்தவோ முடியாது.


sekar ng
ஆக 25, 2025 17:06

இந்தியாவில் மைனாரிட்டி களுக்கு ( கிறிஸ்டியன் முஸ்லிகள்) இருக்கும் சலுகைகள் இந்துக்களுக்கு இல்லை. அவர்கள் நாடு ரோட்டில் சர்ச் கோரி கட்டலாம். ஆனால் ரோடை ஒட்டிய பழம் இந்து கோயில்களை மிக சுலபமாக புல்டோசர் வைத்து தங்கர்த்து விடுவது வடிக்கை


Amsi Ramesh
ஆக 25, 2025 18:45

விநாயகர் சதூர்த்தி வருகிறது எத்தனை மதசார்பில்லாத அரசியல் வாதிகள் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள் பார்ப்போம்


புதிய வீடியோ