வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஓம் சாந்தி
லக்னோ: உத்தர பிரதேசத்தின் அயோத்தி ராம ஜென்ம பூமி வளாகத்தில் இருந்த பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்ட பின், ராமர் கோவிலின் தற்காலிக அர்ச்சகராக நியமிக்கப்பட்டவர் சத்யேந்திர தாஸ். இவர், 20 வயதிலேயே சன்னியாசம் பெற்றவர்; 'நிர்வாணி அகாடா' என்ற அமைப்பிலிருந்து வந்தவர். அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தின் போது கோவில் தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு தேவையான தகவல்களை கொடுத்து, அவர்களின் நன்மதிப்பை பெற்றவர். அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகும் அவரே தலைமை அர்ச்சகராக தொடர்ந்தார்.மூளை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், உ.பி.,யின் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தின் நரம்பியல் பிரிவில், கடந்த 3ல் அனுமதிக்கப்பட்டார்; நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.சத்யேந்திர தாஸ் மறைவுக்கு, பிரதமர் மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் பிரஜேஷ் பதக் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராமர் கோவில் அறக்கட்டளையின் தலைவர் சம்பத் ராய் கூறும்போது, ''அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகராக சத்யேந்திர தாஸ் நியமிக்கப்பட்ட போது, அவருக்கு சம்பளம் வெறும் 100 ரூபாய் தான். எனினும், அவர் கோவிலின் வளர்ச்சிக்காக பாடுபட்டார்,'' என்றார்.
ஓம் சாந்தி