உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாங்க ஏமாற மாட்டோம்; பிரசாத முறையில் மாற்றம் அறிவித்த அயோத்தி ராமர் கோவில்!

நாங்க ஏமாற மாட்டோம்; பிரசாத முறையில் மாற்றம் அறிவித்த அயோத்தி ராமர் கோவில்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: திருப்பதி லட்டு விவகாரத்தில் நடந்த குளறுபடியைத் தொடர்ந்து, அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம், பிரசாதம் வழங்கும் விவகாரத்தில் அதிரடி முடிவை எடுத்துள்ளது.உலகளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவில் பிரசாதமான லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த சம்பவத்தையடுத்து, திருப்பதி கோவிலில் 3 நாள் பரிகார பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள பிரபலமான கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில், உத்தரபிரதேசம் அயோத்தி ராமர் கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் குழுவை மாற்றி அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அந்த கோவிலின் ராம் ஜென்மபூமி கோவிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் பேசுகையில், 'கோவில்களுக்கு வழங்கப்படும் நெய்யின் தரம் கவலை அளிக்கிறது. எனவே, கோவில் பிரசாதங்களை வெளியாட்கள் தயார் செய்ய முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இனிமேல், பிரசாதங்கள் அனைத்தும், கோவில் அர்ச்சகர்களின் முன்னிலையில் மட்டுமே நடக்கும். கோவில் பிரசாதங்களில் தேவையில்லாத பொருட்களை கலப்படம் செய்து, சர்வதேச அளவில் கோவில்களை அவமதிக்கும் முயற்சிகள் நடக்கின்றன,' எனக் கூறினார். மதுரா கோவில் நிர்வாகமும் பழங்கள், பூக்கமள் மற்றும் பிற இயற்கை பொருட்களை வைத்து தயாராகும் பிரசாதங்களுக்கு பதிலாக, பழமையான முறையில் பிரசாதங்களை வழங்க முடிவு செய்துள்ளது. அதேபோல, உத்தரபிரதேசத்தில் உள்ள மன்கமேஸ்வரர் கோவில், அனுமன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பிரசாதங்களை தயாரிக்கும் முறைகளிலும் பல கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

narayanansagmailcom
செப் 27, 2024 22:12

அறநிலைய துறை வசம் இருக்கும் கோவில்களில் பக்தர்களுக்கு சரியான பிரசாதம் மற்றும் தினமும் மதியம் அன்ன பிரசாதம் கொடுப்பது இல்லை. அதிலும் ஊழல். அதனால் கோவில்களில் தினசரி பூஜை பராமரிப்பு திருவிழாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் என்று எதுவம் கொடுப்பது இல்லை. அதனால் அறநிலைய துறை கோவில்களை பக்தர்கள் வசம் கொடுத்து விட்டு வெளியேற்ற வேண்டும்.


Sivak
செப் 27, 2024 21:27

பவன் கல்யாண் சொன்னது போல் சனாதன தர்மம் பாதுகாப்பு வாரியம் அமைத்திட வேண்டும் ..


Ramesh Sargam
செப் 27, 2024 20:00

இனி இதுபோன்று ஒரு தவறு இந்தியாவில் உள்ள எந்த ஹிந்து கோவில்களிலும் ஏற்படக்கூடாது. கோவில் நிர்வாகம் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பிரசாதம் தயாரிக்கும் இடம் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கவேண்டும். பிரசாதத்திற்கு உபயோகப்படுத்தப்படும் பொருட்கள் முற்றிலும் தரமானதாக, கலப்படம் இல்லாமல் இருக்கிறதா என்று சோதனை செய்யப்படவேண்டும். ஓம் நம சிவாய. ஓம் நமோ வெங்கடேசாய.


Palanisamy Sekar
செப் 27, 2024 18:52

இனியாவது இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அனைத்துக்கோவில்களிலும் பிறமத்தினரை பணியில் அமர்த்தினால் அதனை கடுமையாக போராடி தடுக்க வேண்டும். அவர்கள் சாமான்ய மக்களையே மதமாற்றம் செய்திட என்னென்னவோ செய்கின்றார்கள். அப்படிப்பட்ட கீழான புத்தியுள்ளவர்கள் திருமலையில் வேண்டுமென்றே தான் செய்திருப்பார்கள் என்றே மக்கள் இப்போது நம்புகின்றார்கள் கோபத்தோடு. இனியேனும் உஷாராக இருக்க வேண்டும் இந்துக்கள்.


SUBBU,MADURAI
செப் 27, 2024 19:26

பொத்தாம் பொதுவாக இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்வதை விட தமிழக இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்லியிருந்தால் பொருத்தமாக இருக்கும்.


D.Ambujavalli
செப் 27, 2024 18:44

அவர்கள் ஒவ்வொருவராக விழித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை