உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடிக்கு எதிராக காங்., உரிமை மீறல் தீர்மானம்

பிரதமர் மோடிக்கு எதிராக காங்., உரிமை மீறல் தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியை விமர்சித்து பேசியதாக கூறி பிரதமர் மோடிக்கு எதிராக ராஜ்யசபாவில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அவை தலைவர் ஜக்தீப் தங்கருக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தங்கருக்கு காங்., கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:பிரதமரின் உரிமை மீறல் மற்றும் சபையை அவமதிக்கும் ஒரு விஷயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.கடந்த 2ம் தேதி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி அளித்த பதிலுரையின் போது, 2014 ல் நாங்கள் ஆட்சிக்கு வந்த போது, ராஜ்யசபாவில் எங்கள் பலம் குறைவாக இருந்தது. அவைத்தலைவர் எதிர்புறத்திற்கு ஆதரவாக இருந்தது என்றார். பிரதமரின் இந்த விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஹமீத் அன்சாரியை பிரதமர் விமர்சிப்பது இது முதல் முறை அல்ல.பிரதமர் மோடி செய்ததைப் போல், வேறு எந்த பிரதமரும் லோக்சபா சபாநாயகரையோ, ராஜ்யசபா அவைத்தலைவரையோ விமர்சித்து பேசியது இல்லை. அனைத்து விதிமுறைகளையும் பிரதமர் மீறிவிட்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கோருகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

கண்ணன்
ஜூலை 10, 2024 06:26

என்ன உரிமை மீறப்பட்டது? கொள்ளையடிக்கும் உரிமையா?


naranam
ஜூலை 10, 2024 02:52

இவனை முதலில் உள்ளே தள்ள வேண்டும்.


Kasimani Baskaran
ஜூலை 09, 2024 22:21

ஓவராக ஆடுவதைப்பார்த்தால் என்சிபி க்கு நடந்தது காங்கிரசுக்கும் நடக்கலாம்...


sankaranarayanan
ஜூலை 09, 2024 21:04

பெயரில் மட்டும் ஜெய் ராம் என்று வைத்துக்கொண்டால் போதுமா கூடவே ரமேஷ் என்றும் கூடுதல் உள்ளது ஆனால் செய்வது அனைத்தும் ராமருக்கு எதிர்மறைதான்


Anu Sekhar
ஜூலை 09, 2024 18:30

நாட்டிற்கு , மக்களுக்கு எதாவது நல்லது முடிஞ்சா செயுங்க. இல்லாட்டி வாயை மூடிக்கொண்டு சும்மா கிடங்க .


Nandakumar Naidu.
ஜூலை 09, 2024 17:42

தேச,சமூக மற்றும் ஹிந்து விரோதம்... இவர்களெல்லாம் நாட்டிற்கும்,வீட்டிற்கும், சமூகத்திற்கும் மிகவும் கேடு. அழிக்கபடவேண்டிய தீய சக்திகள்.


என்றும் இந்தியன்
ஜூலை 09, 2024 17:33

உங்களை தேர்ந்தெடுத்தது மக்களுக்கு நல்லது செய்ய அதாவது நீங்கள் செய்வது பண சேவைக்காக அதாவது காங்கிரஸ் பணம் கொடுப்பதால் உளறுவது.


ஆரூர் ரங்
ஜூலை 09, 2024 16:54

அப்துல் கலாம் அவர்களைப் புகழும் பிரதமரே ஹமீத் அன்சாரியை குற்றம் கூற மதமா காரணம்? செயல்பாடுகளும் நடத்தையுமே காரணங்கள்.


RajK
ஜூலை 09, 2024 16:52

இந்த ஆளு செஞ்ச மோசத்தை விட பாஜகவோ மோடி அவர்களை செய்யவில்லை. வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்துக்கொண்டு ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்த சதி திட்டம் தீட்டி சட்டம் கொண்டு வந்தவர் தான் இந்த ஜெயராம் ரமேஷ். தமிழர்களை பெருமைப்படுத்தும் வகையில் செங்கோலை பாராளுமன்றத்தில் நிறுவியது மோடி. இதுவரை எந்த பிரதமரும் வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ தமிழைப் பற்றி பெருமையாக பேசியதில்லை , முதன்முறையாக தமிழைப் பற்றி பெருமையாக பேசியவர் மோடி தான்.


ஆரூர் ரங்
ஜூலை 09, 2024 16:49

பதவிக்கே தகுதியற்ற இரண்டு பேர். பிரதிபா பாட்டீல் மற்றும் அன்சாரி. வகித்த பதவிக்கு தக்க செயல்பாடுகள் இல்லை.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை