உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் அரியவகை கனிமங்கள்; மத்திய அமைச்சர் மகிழ்ச்சி தகவல்

இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் அரியவகை கனிமங்கள்; மத்திய அமைச்சர் மகிழ்ச்சி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அரிய வகை கனிமங்கள் இறக்குமதிக்காக, பிரேசில் மற்றும் டொமினிகன் ரிபப்ளிக் நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள, மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் பேசி வருவதாக, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.இதன் வாயிலாக இப்பிரிவில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளில் அதிக கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். ஏற்கனவே ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, ஜாம்பியா உள்ளிட்ட சில நாடுகளுடனும், சர்வதேச எரிசக்தி அமைப்புடனும் இதுதொடர்பாக இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.நம் நாட்டிடம் 85.20 லட்சம் டன் அளவுக்கு அரிய வகை கனிமங்களின் இருப்பு உள்ளதாக, பார்லி.,யில் அவர் தெரிவித்துள்ளார்.அரிய வகை கனிமங்களின் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளரான சீனா, இவற்றின் ஏற்றுமதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால் உலகளவில் மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது என்றும் அவர் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது: ஆந்திர பிரதேசம், தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் எட்டு மாநிலங்களின் கடல் பகுதிகளை ஒட்டி, 72.30 லட்சம் டன் அரிய வகை கனிமங்கள் உள்ளன. அதே போல குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள கனமான பாறைகளில் 12.90 லட்சம் டன் அரிய வகை கனிமங்கள் உள்ளன.அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் அணு கனிம ஆய்வு மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம், நாட்டின் கடலோர மற்றும் நதிக்கரை பகுதிகளில் அரிய வகை கனிமங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 18 டன் அளவிலான அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

venugopal s
ஜூலை 24, 2025 17:06

எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக அதானி குழுமத்துக்கு காண்ட்ராக்ட் கொடுத்து விடலாம்!


ஆரூர் ரங்
ஜூலை 24, 2025 17:46

அப்போ நம்ம வைகுண்டதுக்கு ஒண்ணும் கிடையாதா? தமிழர் என்பதால் ஓர வஞ்சனை?.


vivej
ஜூலை 24, 2025 20:52

உமக்கு டாஸ்மாக் மூடி மட்டும் தான் வீணா போன வேணு


ஆரூர் ரங்
ஜூலை 24, 2025 15:01

அமைச்சருக்குத் தெரிந்திருக்குமா?


RAVINDRAN.G
ஜூலை 24, 2025 13:04

நம்ம திராவிட குடும்பம் சொந்தமா சாட்டிலைட் அனுப்பி எங்க என்னென்ன இருக்குனு கண்டுபிடிச்சிடுவாங்க. யாருக்கும் சொல்லமாட்டார்கள். தேவையான கட்டிங் கொடுத்து வேலையே காட்டிடுவாங்க.


Barakat Ali
ஜூலை 24, 2025 11:46

அரசே எடுக்குமா ???? அல்லது உரிமங்கள் தனியார் பெருநிறுவனங்களுக்கு வழங்கப்படுமா ????


Padmasridharan
ஜூலை 24, 2025 08:38

எந்த வகை எடுத்துக்காட்டும் அரிய வகை கனிமங்கள் கொடுக்கவில்லையே


Jack
ஜூலை 24, 2025 10:02

எதை எடுத்து காட்டணும் என்று எதிர்பார்க்கிறீர்கள் ?


Thravisham
ஜூலை 24, 2025 08:12

இந்த தகவலால் திருட்டு த்ரவிஷன்களின் கொள்ளை அதிகமாகும். சுரண்டி கொழுத்திடுவானுங்க. மத்திய அரசே உஷார் உஷார்


Karthik Madeshwaran
ஜூலை 24, 2025 09:52

BJ party only eating all, through Adani & Ambani. But you people are trusting them foolishly. What so pity.


Jack
ஜூலை 24, 2025 08:12

எந்த ஆராய்ச்சியும் செய்யாம திராவிட தலைகள் தெரிந்து வைத்திருப்பார்கள் எங்கே எந்த கனிமம் வெட்டியெடுக்கலாம் என்று


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை