உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகத்தின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு அதிகம்: டிரம்ப்புக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் பதில்

உலகத்தின் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு அதிகம்: டிரம்ப்புக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இந்திய பொருளாதாரத்தை இறந்த பொருளாதாரம் எனக்கூறிய டிரம்ப்புக்கு பதிலளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, ' உலக வளர்ச்சிக்கு அமெரிக்காவை விட இந்தியா அதிக பங்களித்து வருகிறது,' எனக்கூறியுள்ளார்.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது வரி விதித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், 'இந்திய பொருளாதாரத்தை இறந்த பொருளாதாரம் ' எனக்குறிப்பிட்டார்.மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டி விகிதம் குறித்து அறிவித்தார். தொடர்ந்து இந்திய பொருளாதாரம் தொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. உலகின் வளர்ச்சிக்கு அமெரிக்காவை விட இந்திய அதிக பங்களிப்பு அளித்து வருகிறது. இந்தியாவின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது. ஆனால், அமெரிக்காவின் பங்கு குறைவானதாகவே இருக்கும். 11 சதவீதம் அளவுக்கு மட்டுமே இருக்கும் என கணிக்கிறோம். இந்திய பொருளாதாரம் இன்னும் வளரும்.ஐஎம்எப் கணிப்பின்படி உலக பொருளாதாரம் 3 சதவீதம் மட்டுமே வளரும். ஆனால், இந்திய பொருளாதாரம் 6.5 சதவீதம் வளரும் என கணித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவின் வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
ஆக 07, 2025 15:56

இனிமே அப்கே பார் புட்டின் சர்க்கார். அப்கே பார் ஜிங் ஜிங் சர்க்கார் தான்.


அப்பாவி
ஆக 07, 2025 11:25

கடன் வாங்கி ராஃபேல்,அப்பாச்சி, துப்பாக்கி, ஏவுகணைந்னு வாங்கி தள்ளினா ஐ.எம்.எஃப் பார்வைக்கு வராமலா போகும்?இந்தியாவின் பங்களிப்பு அவிங்களுக்கு தெரியாமலா போகும்? அதான் 7 சதவீத வளர்ச்சி கேரண்டின்னு சொல்றாங்க. அதையே ரிசர்வ் பேங்கு கெவுனரும் சொல்றாரு.


Swaminathan L
ஆக 07, 2025 11:18

மோதிஜி என்பர் நண்பர் தான். ஆனால் அவர் கடுமையான நெகோஷியேட்டர் என்று ஏற்கனவே ட்ரம்ப் பொதுவெளியில் ஒப்புக் கொண்ட பிறகு, ட்ரம்ப்பின் ஒவ்வொரு பேச்சுக்கும் பதில் பேச்சை பிரதமர் மோதி பொதுவெளியில் செய்ய வேண்டும் என்று என்ன அவசியம்? இது அரசியல் விவகாரமா, பொதுவெளியில் மைக் பிடித்து பேசிக் கொண்டிருக்க? ராஜாங்க ரீதியில் என்ன பேச வேண்டுமோ அதை நம் அரசு செய்து கொண்டிருக்கிறது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 06, 2025 21:45

எலான் மஸ்க் தனது நிறுவன விஞ்ஞானிகளிடம் சொல்லி புதிதாக ஒரு மைக்ரோ சிப் தயாரிக்க சொல்லி இருக்கிறார். கூடிய விரைவில் அது டிரம்ப் மூளையில் பொருத்தப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். ராகுல் அவருடன் மருத்துவ மனையில் தங்கி அவருக்கு உதவியாக இருப்பார். அதன் பிறகு டிரம்ப் நார்மல் ஆகி விடலாம். பின்னர் டிரம்ப் தமிழக அரசுடன் பேசி தமிழக திராவிட மாடல் அரசு மத்திய அரசக்கும் இடையிலான போர் நிறுத்தம் செய்யப்பட்டு விடும் என்று ஜோசியர் ஒருவர் ஆரூடம் கூறியுள்ளார். ஆகவே அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும். இது உண்மையில் நடந்தால் எப்படி இருக்கும். நினைத்தாலே புல்லரிக்குது.


Ramesh Sargam
ஆக 06, 2025 20:22

டிரம்புக்கு ஆளுமையும் இல்லை. பொருளாதாரமும் தெரியவில்லை. மொத்தத்தில் அவருக்கு மூளை என்பதே இருக்கிறதா சந்தேகம்.


போராளி
ஆக 07, 2025 14:10

அதனால் தான் மோடி எனது நண்பர் என்று கூறினாரோ


Karthik Madeshwaran
ஆக 06, 2025 20:15

எதற்காக கள்ள மவுனம் சாதிக்கிறார் ? வாயை திறந்து பேச வேண்டாமா ?


sankaranarayanan
ஆக 06, 2025 19:47

இந்திய பொருளாதாரத்தை இறந்த பொருளாதாரம் எனக்கூறிய டிரம்ப்புக்கு பதிலளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, கூறியது இந்திய மக்களால் வரவேற்கத்தக்கது இத்தருணத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து டிரம்புக்கு எதிராக பெயராவில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தாவிட்டால்கூட எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் ஒரு நாட்டு அதிபதி வளர்ந்து வரும் அடுத்த நாட்டை இறந்த பொருளாதாரம் என்று கூற நா கூசவில்லையா அல்லது நாவே இல்லையா இதை ஏன் உலக நீதிமன்றத்தில் யாராவது ஒருவர் மான நஷ்ட வழக்கு தொடரக்கூடாது


Priyan Vadanad
ஆக 06, 2025 19:37

அமெரிக்க அதிபரின் கருத்துக்கு நமது பிரதமர் நேரடியாக ரிசர்வ் பேங்க் கவர்னர் முன்னிலையில் பதில் சொல்லலாமே


போராளி
ஆக 07, 2025 14:13

பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவே பயப்படுறவர் டிரம்புக்கு எதிராக எப்படி பேசுவார்


Raman Gangadharan
ஆக 06, 2025 19:29

Congratulation for your great job.continue it.l am satisfied.


தாமரை மலர்கிறது
ஆக 06, 2025 19:20

இந்தியாவின் பொருளாதாரம் றெக்கைகட்டி பறக்கிறது. இந்தியர்களின் சம்பளம் கடந்த ஐந்தாண்டில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. ஸ்டார் நடிகர்களின் படத்தை பார்க்க ஒரு குடும்பம் சராசரியாக ஐயாயிரத்திலிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்கிறார்கள். மக்கள் உலகத்தை சுற்றிப்பார்க்க லட்சங்களில் வருடந்தோறும் செலவுசெய்கிறார்கள். டால் கேட்களில் பணம் மழையாக கொட்டுகிறது. வீடுகள் கோடிக்கு கீழ் இந்தியாவில் எங்கும் கிடைக்காது. உலகத்தின் வளர்ச்சி இந்தியாவின் தோள்களில் நிற்கிறது.


புதிய வீடியோ