மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
10 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2
பெங்களூரு ;''நிதியுதவி வழங்குவதில், மத்திய அரசு பாரபட்சம் பார்க்கிறது என்றால், காங்கிரஸ் அரசு வெள்ளை அறிக்கை வெளியிடுமா?'' என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் சவால் விடுத்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:நிதியுதவி வழங்குவதில், மத்திய அரசு கர்நாடகாவுக்கு அநியாயம் செய்வதாக குற்றம்சாட்டி, டில்லியில் தர்ணா நடத்த காங்கிரசார் முற்பட்டுள்ளனர். நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் பார்த்தது என்றால், காங்கிரஸ் அரசு வெள்ளை அறிக்கை வெளியிடட்டும்.ஒரு பொய்யை, நுாறு முறை சொன்னால், அது உண்மையாகாது என்பதை, முதல்வர் சித்தராமையா புரிந்து கொள்ள வேண்டும். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடன் ஒப்பிட்டால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு காலத்தில், கர்நாடகாவுக்கு மூன்று மடங்கு நிதி கிடைத்துள்ளது என்ற உண்மை, முதல்வருக்கும் தெரியும்.இதுவரை 14 முறை பட்ஜெட் தாக்கல் செய்ததால், தன்னை தானே பொருளாதார வல்லுனர் என, அறிவித்துக்கொண்ட முதல்வர் சித்தராமையா, அவ்வப்போது மாநில மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்.கர்நாடகாவின் பொருளாதார சூழ்நிலை குறித்து, கடந்த 20 ஆண்டுகளில் மத்தியில் இருந்து, மாநிலத்துக்கு வந்துள்ள நிதியுதவி, வரியில் கிடைத்த பங்கு குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
4 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago | 2