10 இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி
புதுடில்லி:பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி டில்லியில், 10 இடங்களில் நேற்று நடந்தது. தாக்குதல் நடந்தால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மீட்பு பணிகள், ஒருங்கிணைப்பு பணிகள் குறித்து டில்லி போலீசார் இந்த ஒத்திகையை நடத்தினர். இன்றும், இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. போலீசாரின் இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.