உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சந்தேகத்திற்குரிய சீன உளவுப்புறா விடுவிப்பு

சந்தேகத்திற்குரிய சீன உளவுப்புறா விடுவிப்பு

மும்பை, நம் அண்டை நாடான சீனாவில் இருந்து, நம் நாட்டை உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட புறா ஒன்று, கடந்த ஆண்டு மே மாதம் மஹாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேயுள்ள செம்பூரில் போலீசாரால் பிடிக்கப்பட்டது. அந்த புறாவின் கால்களில் தாமிரம் மற்றும் அலுமினியத்தால் ஆன இரு வளையங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன. புறாவின் இறக்கைக்கு கீழ் சீன மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தப் புறா சீனாவில் இருந்து உளவு பார்க்க அனுப்பப்பட்டதா என விசாரித்தனர். இதில் பிடிபட்ட புறா பந்தயப்புறா என்பதும், கிழக்கு ஆசிய நாடான தைவானில் பந்தயத்தில் ஈடுபட்டபோது வழி தவறி இந்தியாவுக்கு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்தப் புறா உடல் நலச் சோதனைக்கு பின் நேற்று முன்தினம் பறக்க விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை