உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 70 நாடுகளின் பிரதிநிதிகள் டில்லியில் மரக்கன்று நடவு

70 நாடுகளின் பிரதிநிதிகள் டில்லியில் மரக்கன்று நடவு

புதுடில்லி:பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, டில்லி மாநில அரசு சார்பில், 'சேவா பக்வதா' என்ற பெயரில், 15 நாட்கள் நிகழ்ச்சி துவங்கியுள்ளது. இதில், நேற்று, 70 நாடுகளின் துாதரக அதிகாரிகள், சென்ட்ரல் ரிட்ஜ் பகுதியில் மரக் கன்றுகளை நட்டு, நிகழ்ச்சியை துவக்கினர். டில்லியில் உள்ள சென்ட்ரல் ரிட்ஜ் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில், 70 நாடுகளின், 75 துாதர்கள் மற்றும் துாதரக அதிகாரிகள் மரக் கன்றுகளை நட்டனர். இதற்கான நிகழ்ச்சியில், டில்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திரயாதவ், டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா ஆகியோர் பங்கேற்றனர். பிரதமர் மோடியின் பிறந்த நாள், ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளை முன்னிட்டு, சேவா பக்வதா என்ற பெயரில், 15 நாட்கள், பல விதமான திட்டங்களுடன், டில்லி மாநில அரசு துவக்கி நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி, அக்டோபர் 2ம் தேதி நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை