உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கனமழையால் மணிப்பூரில் மீட்பு பணி தீவிரம்

கனமழையால் மணிப்பூரில் மீட்பு பணி தீவிரம்

இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. இம்பால் பள்ளத்தாக்கில் பெய்யும் மழைக்கு மூவர் பலியாகியுள்ளனர். 1,000க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இம்பால் ஆற்றில் கரைகள் உடைந்துள்ளதால, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கவர்னர் மாளிகையை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வெள்ள பாதிப்பு குறித்து மணிப்பூர் நீர்வளத்துறை மற்றும் பேரிடர் நிவாரண மேலாண்மைத்துறை அமைச்சர் அவங்க்போ நிவ்மாய் கூறியதாவது: மணிப்பூரில் பெய்யும் தொடர் மழைக்கு 24,265 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. அரசு அலுவலகங்களுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ