உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எகிறும் டில்லியின் மின்தேவை: 8,647 மெகாவாட் ஆக உயர்வு

எகிறும் டில்லியின் மின்தேவை: 8,647 மெகாவாட் ஆக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தலைநகர் டில்லியின் மின்தேவை வரலாறு காணாத அளவிற்கு இன்று ஒரே நாளில் ‛‛8000 மெகா வாட் '' தாண்டி பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் 47 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கொளுத்தி வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும், வெப்ப அலை காரணமாக டில்லியில் மின் நுகர்வு உயர்ந்து வருகிறது.அதன் படி கடந்த மே.21ம் தேதி டில்லியில் ஒரே நாளில் உச்சபட்ச மின்தேவை ‛‛ 7717'' மெகா வாட்-ஆக பதிவாகி இருந்தது. அடுத்த நாள் (மே.22) இந்த மின் நுகர்வு வரலாறு காணாத அளவு 8000 மெகாவாட்டை தொட்டது. இந்நிலையில் இன்று (ஜூன் 18) மாலை 3: 22 மணி நிலவரப்படி டில்லியின் மின் நுகர்வு ‛‛8647 '' மெகா வாட் (8.6 ஜிகா வாட் ') வரை பதிவாகியுள்ளது. கோடை வெப்பம் தொடர்ந்தால் மின் நுகர்வு இன்னும் உயரும் என அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை