மேலும் செய்திகள்
ஜீப்புகள் இல்லாமல் அவதிப்படும் அதிகாரிகள்!
02-Sep-2024
ஐ.சி.சி., சேர்மன் ஜெய் ஷா
27-Aug-2024
புதுடில்லி, ஏ.பி.சி., எனப்படும் பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பின் 2024 - 25ம் ஆண்டுக்கான தலைவராக மலையாள மனோராமா குழுமத்தின் ரியாத் மேத்யூ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நம் நாட்டில் உள்ள செய்தித்தாள்கள், பத்திரிகைகளின் வினியோகம் தொடர்பாக தணிக்கை செய்து சான்றளிக்கும் பணியை ஏ.பி.சி., எனப்படும் பத்திரிகை வினியோக தணிக்கை அமைப்பு செய்து வருகிறது. மஹாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பின் 2024 -25ம் ஆண்டுக்கான தலைவராக, கேரளாவை சேர்ந்த மலையாள மனோரமா குழுமத்தின் இயக்குனரும், அந்த பத்திரிகையின் முதன்மை துணை ஆசிரியருமான ரியாத் மேத்யூ தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆக., முதல் பி.டி.ஐ., எனப்படும் பிரஸ் ட்ரஸ்ட் ஆப் இந்தியாவின் இயக்குனராக உள்ள இவர், 2016 - 17ல் அதன் தலைவராகவும் பொறுப்பு வகித்து உள்ளார். ஐரோப்பிய நாடான, ஆஸ்திரியாவின் வியென்னாவில் செயல்படும் சர்வதேச பத்திரிகை நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்த ரியாத் மேத்யூ, தற்போது அந்த அமைப்பின் இந்தியாவுக்கான தலைவராக உள்ளார். 'மீடியா ரிசர்ச் யூசர்ஸ் கவுன்சில்' இயக்குனர்களில் ஒருவராகவும், இந்திய இதழ்களின் சங்க உறுப்பினராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.இதழியல் துறையில் பட்டமேற்படிப்பை முடித்துள்ள ரியாத், பிரபல பத்திரிகைகளான, 'தி வாஷிங்டன் போஸ்ட், தி வாஷிங்டன் டைம்ஸ், கேப்பிடல் நியூஸ் சர்வீஸ்' ஆகியவற்றில் பயிற்சி பெற்றுள்ளார். மலையாள மனோரமா ஐந்து மொழிகளில், 40க்கும் மேற்பட்ட இதழ்களை வெளியிட்டு வருகிறது. பத்திரிகை உலகம் மட்டுமின்றி வானொலி, 'டிவி', இசை மற்றும் சைபர்ஸ்பேஸ் துறையிலும் மலையாள மனோரமா கால்பதித்துள்ளது. ஏ.பி.சி.,யின் துணைத் தலைவராக, இந்த கவுன்சிலில் விளம்பரதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.டி.சி., நிறுவனத்தின் கருணேஷ் பஜாஜ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பதிப்பக உறுப்பினர்களை பிரிதிநிதித்துவப்படுத்தும், 'பென்னட் கோல்மென்' நிறுவனத்தைச் சேர்ந்த மோஹித் ஜெயின் செயலராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விளம்பர முகவர் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும், 'மேடிசன் கம்யூனிகேஷன்' நிறுவனத்தைச் சேர்ந்த விக்ரம் சகுஜா, ஏ.பி.சி.யின் பொருளாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
02-Sep-2024
27-Aug-2024